பூரி கூட இந்த மசாலா கிரேவி செஞ்சா 3 கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க

பூரி கூட இந்த மசாலா கிரேவி செஞ்சா 3 கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க
Spread the love

பூரி கூட இந்த மசாலா கிரேவி செஞ்சா 3 கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க

வீட்டில பூரி கூட இந்த மசாலா கிரேவி செஞ்சா, இன்னும் இரண்டு கூட கேட்டு
வாங்கி சாப்பிடுவாங்க .

அனைவருக்கு பிடித்த உணவுகளில் ஒன்று பூரிங்க ,இந்த பூரி சுவையோட சாப்பிட கிரேவி முக்கியமானதாகும் .

பூரிக்கு ஏற்ப கிரேவி கிடைத்தால் செமையாக சாப்பிடலாம் .அவ்வளவு சுவையாக இருக்கும் ,
சாப்பிட சப்பிட்டு கொண்டே இருக்கும் அளவுக்கு கிரேவி சுவை இருக்கும் .

அப்படி பட்ட மொறு மொறு பூரிக்கு ஏற்ப, கிரேவி எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் வாங்க .

பூரிக்கு ஏற்ப கிரேவியும் ,பூரியும் சேர்த்து சாபபிடலாம் வாங்க .

பூரி கிரேவி செய்முறை ஒன்று

அரை கிலோ வெள்ளை கொண்ட கடலை ,அதனை எட்டு மணித்தியாலம்
ஊற வைத்து நன்றாக தண்ணியில வேக வைத்து எடுத்திடுங்க .
வெந்த கொண்ட கடலை ,இரண்டு கரண்டி எடுத்து, பிறிதான தட்டில வைத்து ,
நன்றாக கரண்டியால் மா போல நசித்து கொள்ளுங்க .

பூரி கூட இந்த மசாலா கிரேவி செஞ்சா 3 கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க

வெந்த கொண்ட கடலை தன்ணியை ஒரு கிளாஸ் எடுத்து வைத்திருங்க .அந்த தண்ணியை சட்னிக்கு பயன்படுத்த தேவையான ஒன்று
.இந்த கடலை தண்ணியில் சத்து சுவை இருக்கும் .

இப்போ அடுப்பில கடாயா வைத்து மூன்று கரண்டி எண்ணெய் ஊற்றிடுங்க .நன்றாக சூடானதும் ,அரை கரண்டி சோம்பு ,நன்றாக பொடியாக வெட்டிய இரண்டு வெங்காயம் ,
இது கூட நனறாக சேர்த்து இரண்டு நிமிடம் விடாது வதக்கி வாங்க .

வெங்காயம் வதங்கிய பின்னர் ஒரு கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்திடுங்க

இந்த பூண்டு பச்சை வாசம் போன பின்னர் ,அரைத்த தக்காளி ஒன்று சேர்த்திடுங்க .அப்படியே அதனை வதக்கி வாங்க. வதங்கிய பின்னர் ,உப்பு ,மஞ்சள் ,இரண்டு கரண்டி மிளகாய்த்தூள் ,அரை கரண்டி சீராக தூள்,
மல்லி தூள் , எல்லாம் போட்டு நன்றாக வதக்கி வாங்க .

மசாலா நன்றாக வதங்கிய பின்னர் ,வேக வைத்து எடுத்து வைத்த
கொண்ட கடலையை இதில போட்டு நன்றாக வதக்கி வாங்க .
அதன் பின்னர் மசித்து வைத்த கொண்ட கடலை மற்றும் ,
அந்த தண்ணியையும் சேர்த்து வதக்கிட்டு மூடி போட்டு மூடி வையுங்க .

மசாலா செய் முறை இரண்டு

மிக்சியில் தேங்காய் துருவல் ,8 முந்திரி பருப்பு ,சோம்பு ,பட்டை ,ஒரு அன்னாசி பூ ,
மூன்று கராம்பு ,ஒரு ஏலக்காய் ,தேவையான தண்ணி ,எல்லாத்தையும் போட்டு
இதில நன்றாக மாவு போல அரைத்திடுங்க .

இப்போ அரைத்த விழுதை ,கொதிக்கிற கிரேவியில் ஊற்றி ,நன்றாக கலந்து கொள்ளுங்க .
கரம் மசாலா ,கொத்தமல்லி இலையை போட்டு கலக்கிய பின்னர் ,மெல்லிய நெருப்பில 10
நிமிடம் கிரேவியை கொதிக்க வைத்திடுங்க .இப்போ கிரேவி ரெடியாடிச்சு .

இபோபோ பூரி தயாரிப்பு

இப்போ இந்த கிரேவிக்கு பூரி தயாரிக்கலாம் .,மீளவும் அடுப்பில ஒரு கடயா வைத்து ,தேவையான
எண்ணெய் விட்டு ,பிசைந்து வைத்த பூரி மாவை எடுத்து தட்டி பொரித்து சுட்டு எடுங்க

பூரி நன்றாக் பொங்கி வரும் அளவுக்கு பொரித்து எடுங்க .இந்த பூரி கூட கிரேவி சேர்த்து சாப்பிடலாம் .

வாயூறூம் பூரி கிரேவி ரெடியாகிடிச்சு .இது போல மக்களே நீங்களும் வீட்டில் செய்து அசத்துங்க .

செமையான சூப்பரான பூரி கிரேவி ரெடியாடிச்சு .வாங்க எல்லோரும் சாப்பிடலாம் .

Leave a Reply