தியாகதீபம் லெப் கேணல் திலீபன் நினைவுசுமந்து பிரித்தானியாவில் களங்கண்ட வீரர்கள்

Spread the love

தியாகதீபம் லெப் கேணல் திலீபன் நினைவுசுமந்து பிரித்தானியாவில் களங்கண்ட வீரர்கள்

‘பார்த்தீபன் இன்னமும் பசியோடு இருக்கின்றான்…’ என்ற உணர்வினை நெஞ்சினில் தாங்கியவாறு தியாகதீபம் லெப் கேணல் திலீபன் அவர்களை

நினைவிருத்தி விளையாட்டு வீரர்கள் பலர் பிரித்தானியாவில் ஆடுகளங்கண்டனர்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டு துறை அமைச்சினால் 7வது தடவையாக முன்னெடுக்கப்பட்டிருந்த விளையாட்டுப் போட்டியில்

பிரித்தானியாவின் பல கழகங்கள், குழுக்கள் பங்கெடுத்து வெற்றிகளை தமதாக்கி கொண்டனர்.

தியாகதீபம் லெப் கேணல் திலீபன் நினைவுசுமந்து பிரித்தானியாவில் களங்கண்ட வீரர்கள்

கரப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம், மென்பந்து துடுப்பாட்டம், சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள், பாரம்பரிய விளையாட்டுக்கள் என பல விளையாட்டுக்கள் சிறப்புடனும் பிரமாண்டமாகவும் இடம்பெற்றிருந்தன.

பிரதம விருந்தினர் குறைடன் தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஸ்டீவ் ரீட் அவர்கள் பங்கெடுத்திருக்க, சிறப்பு அதிதிகளாக Croydon civic mayor Alisa

Flemming, Croydon Councillor Stuart Collins, Croydon Councillor Manju Shahul-Hameed, Croydon Councillor Appu Srinivasan, Croydon Councillor Catherine Wilson, Croydon Councillor

Sherwan Chowdhury, Harrow Councillor Suresh Krishna, Harrow Councillor Sasikkala Suresh
, Croydon broadgreen labour party Secretary Rajagopal ஆகியோர் பங்கெடுத்திருந்தனர்.

ஆடுகளத்தின் தொடக்க நிகழ்வாக மங்கள விளக்கினை வரலாற்று மையம் பண்ணிப்பாளர் திரு.சந்தியரூபன், தமிழ் திரு.பாலமுரளி சிவானந்தம், தமிழீழ அரசியல்துறை பி. பொறுப்பாளர் திரு வீரன்,நா.தமிழீழ அரசாங்கத்தின்

துணை சபாநாயகர் கலையழகன்,குறைடொன் நகர தொழில்கட்சி உறுப்பினர் திரு.சர்வான் சௌத்ரி ஆகியோர் ஏற்றிவைத்தனர்.

பிரித்தானிய தேசியக் கொடியினை நா.தமிழீழ அரசாங்கத்தின் மூத்த செயற்பாட்டாளர் திரு.ஆறுமுகம் ஆனந்தம் அவர்களும், தமிழீழத் தேசியக்

கொடியினை மூத்த தேசிய செயற்பாட்டாளர் திரு.கந்தசாமி பரணிதரன் அவர்களும் ஏற்றிவைத்திருந்தனர்.

தியாகி திலீபன் அவர்களது திருவுருவப் படத்துக்கான மலர்மாலையினை நா.தமிழீழ அரசாங்கத்தின் மூத்த உறுப்பினர் திரு.தாமோதரம் பிள்ளை

முருகாதாஸ் அவர்கள் அணிவிக்க, ஈகைச் சுடரினை ஈகைப் பேரொளி முருகாதாஸ் அவர்களின் தயார் வர்ணகுலசிங்கம் புவனேஸ்வரி அவர்கள் ஏற்றிவைத்தார்.

வரவேற்புரையினை நா.தமிழீழ அரசாங்கத்தின் அரசவைத் தலைவர் பாலம்பிகை முருகதாஸ் அவர்கள் வழங்கிவைக்க, வீரர்கள் களங்கண்டனர்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை துணை
அமைச்சர் நீதிராசா அவர்களின் தலைமையில் நடைபெற்றற

இவ்விளையாட்டு வெற்றியபெற்ற வீரர்களுக்கு பதக்கங்கள்,
வெற்றிக்கிண்ணங்கள், பணப்பரிசுகள் வழங்கப்பட்டன.

தியாகதீபம் லெப் கேணல் திலீபன் நினைவுசுமந்து பிரித்தானியாவில் களங்கண்ட வீரர்கள்
தியாகதீபம் லெப் கேணல் திலீபன் நினைவுசுமந்து பிரித்தானியாவில் களங்கண்ட வீரர்கள்
தியாகதீபம் லெப் கேணல் திலீபன் நினைவுசுமந்து பிரித்தானியாவில் களங்கண்ட வீரர்கள்

    Leave a Reply