ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் அலி சப்ரி

Spread the love

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் அலி சப்ரி

2022 செப்டெம்பர் 24ஆந் திகதி நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77ஆவது அமர்வில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி இலங்கையின் அறிக்கையை வழங்கவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது, ஆசியாவில் தொடர்பு மற்றும் நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் குறித்த மாநாட்டின் வெளிவிவகார அமைச்சர்களின் சந்திப்பு, குழு 77 மற்றும் சீன உறுப்பு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின்

கூட்டம், உலகளாவிய அபிவிருத்தி முன்முயற்சியின் நண்பர்கள் குழுவின் அமைச்சர் கூட்டம் மற்றும் அணிசேரா நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டம் போன்ற அமைச்சர்கள் மட்டத்திலான பல்வேறு கூட்டங்களில் அவர் உரையாற்றுவார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் அலி சப்ரி

ஐ.நா. உறுப்பு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடனும் அவர் இருதரப்புக் கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார். மேலும் அவர் நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. வின் உயர் மட்ட அதிகாரிகளையும் சந்திப்பார்.

இலங்கைத் தூதுக்குழுவில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. வுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி மொஹான்

பீரிஸ், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி மற்றும் நியூயோர்க்கில் உள்ள இலங்கையின் நிரந்தரத் தூதரக அதிகாரிகள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அமர்வின் உயர்மட்ட அமர்வு 2022 செப்டம்பர் 20 முதல் 26 வரை நடைபெறும்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

    Leave a Reply