உணவு பஞ்சம் ஏற்படும் ஐநா ஏச்சரிக்கை

Spread the love

உணவு பஞ்சம் ஏற்படும் ஐநா ஏச்சரிக்கை

உக்கிரேன் ரசியாவுக்கு இடையில் ஏற்பட்டுள்ள போரினால் உலகில் உணவு பஞ்சம் ஏற்படும் என ஐநா எச்சரிக்கை வெளியிட்டுள்ளது


உக்கிரேனில் இருந்து அதிக உணவு மற்றும் ஒயில் வகைகள் ரசியாவிடம் இருந்து தானிய வகைகளும் ஐரோப்பா முதல் உலக எங்கும் இறக்குமதி செய்ய படுகின்றன

இந்த ஒயில் உக்கிரேன் துறைமுகத்தில் தேங்கி கிடக்கிறது எனவும் அதனை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்திட முடியா நிலையில் ரசியா போரினை தொடுத்து வருவதால் உணவு பஞ்சம் ஏற்படும் ஐநா கவலை வெளியிட்டுள்ளது

ஒயில் உணவு இறக்குமதி தடை பட்டால் ஐரோப்பாவில் உள்ள பல உணவகங்கள் அடித்து பூட்டும் நிலை ஏற்பட போவதாக இவர்கள் மத்தியில் அச்சம் காணப்படுகிறது

உக்கிரேன் மீதான போர்நிறுத்த படாவிட்டால் உலகலாவிய ரீதியில் பெரும் உணவு பஞ்சம் ஏற்பட்டு அதுவே பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பது ஐநா வாதமாக உள்ளது


முடிவில்லா மேலும் போர் நீண்டு தொடர்ந்தால் எதிர் வரும் மூன்று மாதத்திற்குள் உணவு பஞ்சம் ஏற்படும் என அவர்கள் வெளியிட்ட கவலை மெய்ப்பிக்கும் நிலை ஏற்பட்டு விடும்


உக்கிரேன் மீதான போரினை முடிவுக்கு கொண்டுவர ரசியாவின் நேச நாடுகல் ஐநா உள்ளிட்ட, அமெரிக்காவும் அழுத்தம் கொடுத்து வருகின்றன

உணவு பஞ்சம் ஏற்படும் ஐநா ஏச்சரிக்கை

ஆனால் ரசியா ஜனாதிபதி பிளாடீர் மீர் புட்டீனோ உகிரேனை ஆக்கிரமிக்காமல் விடுவதில்லை என்ற நிலையோடு கட்டளைகளை பிறப்பித்த வண்ணம் உள்ளார்

உலகளவில் உணவின் விலை உயர்வு நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது, ஐநா விடுத்துள்ள உணவு பஞ்ச அபாய எச்சரிக்கையின் பின்னர் உணவு பொருட்களின் விலைகள் அதிகரிக்கலாம் என அஞ்ச படுகிறது

உலக மக்கள் உணவின்றி பட்டினியால் மரணிக்கும் நிலை ஏற்பட்டால், உலக நாடுகள் ஒன்றிணைந்து போரை தொடுக்க வேண்டிய கடினமான காலம் ஒன்று உருவாகும் என்பதாக கணிக்க பெறுகிறது

அவ்வாறு இடம்பெற்றால் அதுவே மூன்றாம் உலக யுத்தமாக மாற்றம் பெற்றுவிடும் அபாயம் எழுந்துள்ளது

உணவு பஞ்சம்
இலங்கையில் உணவு பஞ்சம் தற்போது ஆரம்பிக்க பட்டுள்ளது, அதுபோலவே ஐரோப்பாவிலும் எரிவாயு மற்றும் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டால், மக்கள் குளிரில் நடுங்கி இறக்கும் நிலை ஏற்பட்டு விடும் என்பதை களநிலவரமாக உள்ளது

குளிர்வலய நாடுகளில் வசிக்கும் மக்களே பெரிதும் பாதிக்க படும் நிலை ஏற்படும் என்பதே ஆய்வாளர்களின் அச்சமாக உள்ளது

உணவு உற்பத்தியில் முன்னிலை வகித்து அதிக ஏற்றுமதியை தன்னகத்தே வைத்திருக்கும் உக்கிரேன் ரசியா மோதல் உலக நாடுகள் வரை பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது


விரைந்து ரசியா உக்கிரேன் போரை முடிவிற்கு கொண்டு வர வேண்டும் எனின் ரசிய கூறும் ஆயுத விநியோகிப்பை பிரிட்டன் அமெரிக்கா நாடுகள் உடன் நிறுத்த வேண்டும்

அதற்கு அமெரிக்கா பிரிட்டன் சம்மதிக்குமா ..? உணவா போரா அமெரிக்கா பிரிட்டன் காலில் பந்தை அடித்து விட்டுள்ளது ரசியா ,இது தான் மக்களே கள யதார்த்த நிலை .

  • வன்னி மைந்தன் –

Leave a Reply