இலங்கை இந்தியா கப்பல் சேவை ஆரம்பம்

இலங்கை இந்தியா கப்பல் சேவை ஆரம்பம்
Spread the love

இலங்கை இந்தியா கப்பல் சேவை ஆரம்பம்

இலங்கை இந்தியா கப்பல் சேவை ஆரம்பம் ஆக உள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது .நிறுத்த பட்ட இரு நாட்டு கப்பல் சேவைகள் வழமை போன்று இடம்பெறும் என தெரிவிக்க பட்டுள்ளது .

இந்தியா இலங்கைக்கு இடையில் மேற்கொள்ள பட்ட ஒப்பந்தத்தின் அடைப்படையில் ,இந்த கப்பல் நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வந்தது .

சீரற்ற காலநிலை காரணமாக தடை பட்டிருந்த ,இந்தியா இலங்கை பயணிகள் கப்பல் சேவைகள், மீளவும் ஆரம்பிக்க படவுள்ள விடயம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

கப்பல் சேவையின் கட்டண விபரம்

இந்தியா இலங்கைக்கு இடையில் இடம்பெறும் பயணிகள் கப்பல் சேவையின் அதிகரித்த கட்டணம் .

கீழ் தளத்தில், பயணிக்க ஐந்து ஆயிரம் இந்தியா ரூபாய்களும் ,மேல்தளத்தில் பயணிக்க, ஏழு ஆயிரம் ரூபாய்கள் கட்டணமாக அறவிட படுவதாக தெரிவிக்க பட்டுள்ளது .

இந்தியா நாக பட்டினம் ,இலங்கை காங்கேசன் துறைக்கு இடையில் ,இந்த கப்பல் பயண சேவைகள் காணப்படுகின்றன .

இந்த கப்பல் சேவைகள் ஊடாக இரு நாடுகளுக்கும் சிறந்த வர்த்தக பொருளாதார பயன்பெறுகள் உள்ளதாக இரு நாடுகளும் தெரிவித்துள்ளன .

மீளவும் இலங்கை இந்தியாவுக்கு இடையில் பயணிகள் கப்பல் சேவைகள் ஆரம்பிக்க படுவதை இட்டு , பயணிகள் மகிழ்ச்சியில் உறைந்துள்ளனர் .

மீள கப்பல் சேவை நிறுத்த படுமா ..?

பிரதமர் நரேந்திர மோடியினால் ஆரம்பித்து வைக்க பட்ட இந்திய இலங்கை கப்பல் சேவை,பயணிகள் வரவு குறைந்து காணப்பட்டதால் ,அந்த சேவை நிறுத்த .பட்டது

அவ்வாறன நிலையில் மீளவும் இலங்கை இந்தியாவுக்கு இடையில் மக்கள் சென்று வருவதற்கு ,வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ள ,இந்த கப்பல் சேவை நிறுத்த படக்கூடும் என்கின்ற அச்சமும் வெளியிட பட்டுள்ளது .

மக்கள் பயணிக்க அதிக கட்டணத்தை ,கப்பல் சேவை நிறுவனம் அறவிடுவதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர் .

இதனை இந்தியா இலங்கை போக்குவரத்து அமைச்சர்கள் கவனத்தில் எடுத்து ,மக்களுக்கு சிறந்த விலையில் கட்டணத்தை வசூல் செய்தால் மக்கள் ,கப்பல் ஊடாக பயணம் செய்திட ஏதுவாக இருக்கும் என்கின்ற கருத்து வெளியிட பட்டுள்ளது .

தடைபடாது இந்தியா இலங்கை கப்பல் சேவை தொடர்ந்து பயணிக்க ,இலங்கை அரசு ,இந்தியா அரசு கவனத்தில் எடுத்து செயலாற்றுமா என்பதே கேள்வியாக உள்ளது .