துருக்கிய இராணுவம் மீது ரொக்கட் தாக்குதல் – சிதறிய இராணுவ வாகனங்கள்

Spread the love

துருக்கிய இராணுவம் மீது ரொக்கட் தாக்குதல் – சிதறிய இராணுவ வாகனங்கள்

சிரியாவின் வட மேற்கு பகுதியில் நிலை கொண்டுள்ள துருக்கி ,மற்றும்

அதன் ஆதரவு படைகள் மீது சிரியா அரச இராணுவம் கடும் ரொக்கட் தாக்குதலை நடத்தியது .

    2,800 இராணுவ வாகனங்களுடன் குவிக்க பட்டுள்ள துருக்கிய படைகள்

    பாரிய இராணுவ நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள தயாராகி வருகின்றனர்

    இதனை தடுக்கும் முகமாக ,சிரியா இராணுவத்தினர் இந்த ஏவுகணை

    தாக்குதலை மேற்கொண்டனர் ,.குறித்த பகுதியில் நிலை கொண்டுள்ள

    அப்பாவி குருதீஸ் மக்களை துருக்கிய படைகள் கைது செய்து இழுத்து சென்றுள்ளனர் .

    துருக்கிய அரசுக்கு எதிராக குருதீஸ் படைகள் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர் ,

    இவர்களின் தலைவர் அப்துல்லா ஒயிலானை அமெரிக்கா படைகள் கைது செய்து துருக்கியிடம் ஒப்படைத்தது

    எனினும் தலைவன் இல்லாத போதும் அவர்கள் போராட்டம் நீர்த்து போகவில்லை ,

    அமெரிக்கா ஆதரவுடன் வேகம் பெற்ற குருதீஸ் போராளிகள் தாக்குதல்கள் தற்போது கேள்வி குறியாக ஒன்றாகி மாற்றம் பெற்றுள்ளன .

      சிரியா,துருக்கி,ஈரான்,ஈராக் ,போன்ற நாடுகளை பந்தாடிய வண்ணமே இவர்கள் போராடி வருகின்றனர் என்பது குறிப்பிட தக்கது

      தமிழீழ விடுதலை புலிகளை போன்று இவர்களும் அழிவின் நிலையில் உள்ளனர் .தமது இருப்பை தக்க வைத்து கொள்வதில் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர் .

      துருக்கிய இராணுவம் மீது
      துருக்கிய இராணுவம் மீது

      Leave a Reply