இட்லி தோசைக்கு ருசியான சட்னி செஞ்சு பாருங்க டேஸ்ட் நாக்குல நிக்கும்
இட்லி தோசைக்கு ருசியான சட்னி நம்ம வீட்டில இன்றே செய்து பாருங்க , டேஸ்ட் நாக்குல நிக்கும்
.மிகவும் தரமான சுவயான ,இலகுவான சட்னி .
பத்து இட்லி தோசை கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க .
அவ்வாறான இந்த பொட்டுக் கடலை சட்னி செய்வது எப்படி என்பதை வாங்க பார்க்கலாம் .
பொட்டு கடலை சட்னி செய்வது எப்படி ..?
கடலை சட்னி செய்வதற்கு தேவையான பொருட்கள் என்ன ..?
கீழே பார்க்கலாம் வாங்க .
பொட்டு கடலை சட்னி செய்முறை ஒன்று
அடுப்பில கடாய வைத்து மூன்று கரண்டி எண்ணெய் விட்டிருங்க .
எண்ணெய் நன்றாக சூடானதும் ,சின்ன வெங்காயம் பத்து ,இரண்டு பல்லு பூண்டு ,காரத்திற்கு ஏற்ப வறு மிளகாய் சேர்த்து நன்றாக வறுத்து வாங்க .
இட்லி தோசைக்கு ருசியான சட்னி செஞ்சு பாருங்க டேஸ்ட் நாக்குல நிக்கும்
இது கூட சிறிய துண்டு ,புளி சேர்த்து வதக்கி வாங்க .மூன்று கரண்டி அளவு பொடியாக வெட்டியா தேங்காய் சேர்த்து வதக்கி வாங்க .
இரண்டு நிமிடத்திற்கு பின்னர் ,பொட்டு கடலை சேர்த்து வறுத்து வாங்க .இரண்டு நிமிடம் கழித்து ,இறக்கிய பின்னர் கொஞ்ச நேரம் ஆறவைத்து பின்னர் ,மிக்சியில் போட்டு உப்பு சேர்த்து,கூடவே தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து வாங்க .
இப்போ சட்னி ரெடியாகிடுச்சு .இந்தசட்னிக்கு தாளித்து போட்டா ரெம்பவே சுவையாக இருக்கும் .
அதனால மீளவும் அடுப்பில கடாய வைத்து, எண்ணெய் விட்டு கடுகு ,உளுந்து ,வறுமிளகாய் ,பெருங்காயம் ,கருவேப்பிலை சேர்த்து நன்றாக வறுத்து வாங்க .
ஒரு நிமிடம் வதக்கிய பின்னர் ,அதனை சட்னியில் போட்டு நன்றாக கலக்கி விடுங்க .
இப்போ சட்னி ரெடியாடிச்சு .
இப்போ இட்டலி தோசை கூட சேர்த்து சாப்பிட்டு பாருங்க செம ,சுவையாக இருக்கும் ,மிகவும் இலகுவான முறையில் சிறந்த சட்னி தயாராகிடிச்சு .
பத்து இட்லி நாம சாப்பிடலாங்க .அப்புறம் என்ன குஷி தாங்க .தலைவரே சட்னி எப்படி இருக்கு சொல்லவே இல்லை .