முன்னாள் உபவேந்தர் மீது தாக்குதல் பாராளுமன்றத்தில் அதிருப்தி

பாராளுமன்றத்தில் பதற்றம் - சபாநாயகரின் அறிவிப்பு
Spread the love

முன்னாள் உபவேந்தர் மீது தாக்குதல் பாராளுமன்றத்தில் அதிருப்தி

பேராதெனிய பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அத்துல சேனாரத்ன மீது பல்கலைக்கழக மாணவர்கள் சிலரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சம்பவத்துக்கு பாராளுமன்றத்தில் இன்று (13) கவலை மற்றும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து உரையாற்றினார்கள்.

பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத்

பேராதெனிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் தாக்கப்பட்டமை பாரிய விடயமாகும். கல்வித்துறை பாரிய நெருக்கடியை நோக்கி செல்கிறது. வரலாற்றில் இவ்வாறான சம்பவம் இடம் பெற்றதில்லை. சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சர் விசேட அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். எதிர்காலத்தில் பல்கலைகழங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது இருப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். ஒருவரை ஒருவர் நம்ப முடியாத தன்மை ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ஒருபோதும் பேராசிரியர் ஒருவர் அழுத்தத்திற்கோ அல்லது தாக்குதலுக்கோ உள்ளாகவில்லை.

அத்துல சேனாரத்ன என்பவர் இந்த நாட்டின் சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு புவியியல் நிபுணர். இவ்வாறான சம்பவங்கள் இடம் பெற்றால் நாட்டில் நிபுணர்கள் நிச்சயம் நாட்டை விட்டு வெளியேறி விடுவார்கள். இவர் அந்த பல்கலைக்கழகத்தின் உபவேந்தர். இது குறித்து நாட்டில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னர் மாணவர்கள் மத்தியில் மோதல்கள் இருந்தது. தற்போது மாணவர்கள் விரிவுரையாளர்கள் மத்தியில் அது மோதலாக மாறி வருகிறது. நாட்டில் கல்வி உறுதி செய்யப்பட வேண்டும் என்றால் நாட்டில் இவ்வாறான மோதல்கள் நிறுத்தப்பட வேண்டும்.

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன:

பேராதெனிய பல்கலைகழகத்தின் உபவேந்தர் அவரது புதல்வர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை, வீட்டை சேதப்படுத்தியமை தொடர்பில் விரிவான பேச்சுவார்த்தை அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது பக்க சார்பற்ற விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அறிவித்தார்.

வரலாற்றில் இடம்பெற்ற முதலாவது சம்பவம் இது அல்ல. வன்முறை காலப்பகுதியில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஸ்டென்லி விஜயசுந்தர கொல்லப்பட்டார்.

நாட்டின் பல்கலைக்கழகங்களில் சுதந்திரம் இருக்க வேண்டும். பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்கள் அச்சம் பீதியின்றி செயற்பட முடியாது என்றால் அது கேள்வி குறியாகும். நாட்டில் பொது சட்டமுறை பல்கலைக்கழகங்களிலும் சட்டமாக இருக்க வேண்டும். பல்கலைக்கழகங்களின் சுதந்திரம் பாதுகாக்கப்படுவதற்கு அரசியல் கட்சி, நிறம், பேதங்களுக்கு அப்பால் ஒன்றிணைந்து செயல்படுவோம்.

பல்கலைக்கழகங்கள், பாடசாலைகளில் போதை பொருள் பரவுவதை தடுப்பதற்காக விசேட ஜனாதிபதி செயலணி நியமிப்பதற்காக பிரேரணை நிறைவேற்றப்பட வேண்டும்.

எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஸ்மன் கிரியெல்ல

இந்த சம்பவத்தை ஐக்கிய மக்கள் சக்தி கண்டிக்கின்றது. சம்பவத்தை அனுமதிப்பதில்லை. தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கோருகின்றோம்.

பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு கல்வியை தொடர்வதற்கு அமைதி சூழ்நிலை இருக்க வேண்டும். பேராதனை பல்கலைக்கழகம் ஒக்ஸ்போட் கேம்பிரிட்ஜ் முறைக்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்டது. இருப்பினும் இதன் நோக்கம் நிறைவேற்றப்படவில்லை.

பாராளுமன்ற உறுப்பினர் அசோக பிரியந்த

பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது இவ்வாறு ஒன்றிணைந்திருந்தால்

இந்த பிரச்சினையை தடுத்திருக்க முடியும். எனது வீட்டை தாக்கினர். எனக்கு தற்போது வீடு இல்லை.

பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்சன யாப்பா

இவ்வாறான சம்பவங்களை நாம் தினமும் காண்கின்றோம். இருப்பினும் இது உச்சக்கட்டமாகும். பல்கலைக்கழகங்கள் வரி மூலம் நடத்தப்படுகின்றன. பல்கலைக்கழக மாணவர்களும் இந்த வரி மூலமே கல்வி கற்கின்றனர். இன்று உலகில் அனைத்து பல்கலைக்கழங்களிலும் இவ்வாறான கேலிக்குரிய வன்முறைகள் இல்லை. இம்முறை இதனை பெரும் சிந்தனையுடன் அறிந்துக்கொண்டு செயல்பட வேண்டும். பாரிய வன்முறைக்கு இடமளிக்கக் கூடிய நிலைமையாகும்.

பாராளுமன்ற உறுப்பினர் சமான் பிரிய ஹேரத்

நாம் செய்வது என்னவெனில் சம்பவம் குறித்து கவலை தெரிவிப்பது மட்டுமே இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன. 74 பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் தீயிடப்பட்டன.பல்கலைக்கழக மாணவர் ஒருவர் எமது விகாரையின் பிக்குவை கண்ணத்தில் அறைந்துள்ளார். இன்று நாடு இவ்வாறான நிலைமைக்கு உள்ளாகியுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் டி.பி ஹேரத்

இது மனித உரிமை மீறலாகும். புத்தி கூர்மை மிக்கவர்களை உருவாக்கும் இடத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுமாயின் அது வெட்கப்பட வேண்டிய விடயமாகும்.

இவ்வாறான சம்பவங்களுக்கு கவலை தெரிவித்து நிறுத்த முடியாது. நாட்டில் பாரிய நெருக்கடி நிலைமை உண்டு. இலங்கையில் இடம்பெறும் இவ்வாறான சம்பவங்கள் மூலம் பொதுவான நிலை தெரிகின்றது. இந்த சீரழிக்கும் சம்பவத்தை சமூகத்தில் இருந்து நீக்க வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில்

பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த images 2விசாரணை பெறுபேறுகளை அறிந்து கொள்வதற்கு எமக்கு உரிமை உண்டு பாராளுமன்ற உறுப்பினரின் உயிர் இழக்கப்பட்டது. சொத்துக்கள் இழக்கப்பட்டன. இதேபோன்று இந்த சம்பவம் ஜனநாயகத்திற்கு மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகும். விசாரணை அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பியுங்கள்.

இது குறித்து விரிவான பிரச்சாரத்தை வழங்குங்கள். சில விடயங்களை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரியாது நீங்கள் தலையிட்டு செயல்படுத்துங்கள்.

பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக ராஜபக்ச

இந்த சம்பவம் ஆர்ப்பாட்டத்திற்கு பின்னரே ஏற்பட்டது. இதற்கு மக்கள் விடுதலை முன்னணியும் முற்போக்கு இடதுசாரி முன்னணி கட்சியும் பொறுப்பு கூறவேண்டும். பேராசிரியருக்கு எதிராக செயல்பட்ட மாணவர்கள் தொடர்பில் சட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஆளும் கட்சியின் பிரதம கொறடா பிரசன்ன ரணதுங்க

நாம் அனைவரும் இந்த சம்பவத்தை கண்டிக்கின்றோம். சம்பவம் தொடர்பில் சட்டத்தை சரியான முறையில் நடைமுறைப்படுத்துமாறு நான் கோருகின்றேன்.

இவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது சில அரசியல் கட்சிகள் எதிர்க்கின்றனர். 2 விதமான பேச்சு தேவையில்லை. சட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும்.

வீடுகளை சேதப்படுத்துவதற்கு தூண்டியவர்கள் மத்தியில் பேராசிரியர்கள் இருந்தனர். சில பேராசிரியர்கள் சில பேராசிரியர்களின் வீடுகளில் தீ வைக்க சென்றனர். இன்று அப்பாவி பல்கலைக்கழகமாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு செல்ல அஞ்சுகின்றனர்.

பல நிறுவனங்களை அரச பல்கலைக்கழக மாணவர்களை சேர்த்துக் கொள்ள அஞ்சுகின்றனர். இதனாலே தனியார் பல்கலைக்கழக மாணவர்களை இணைத்துக்கொள்கின்றனர்.

இந்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நானும் கூறுகின்றேன்.மாணவர்களுக்கு ஜஸ் போதைப் பொருளை கொடுத்து அவர்களின் மனநிலையை மாற்றியுள்ளனர். சிலபேராசிரியர்கள் அடியுங்கள் உதையுங்கள் கொல்லுங்கள் என்று பேசுகின்றனர்.

கெளரவ சபாநாயகர் அவர்களே. இதற்கான சட்டம் நடைமுறையில் உள்ளது இந்த பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சில அரசியல் கட்சிகள் இளைஞர்களைக் கைது செய்வது ஜனநாயக விரோதம் என்று கூறுவார்கள். மே 9 இச்சம்பவம் குறித்து கூறும்போது பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் டாக்டர் பேராசிரியர்களின் நடத்தை பற்றி நான் முன்பு பேசினேன்.

அந்த பேச்சு முடிந்ததும் ஃபேஸ்புக்கில் கண்டனத்திற்குள்ளானேன். நான் மனசாட்சியுள்ள ஒரு பேச்சாளன். வீடுகளுக்கு தீ வைக்க குழந்தைகளை தூண்ட அரசியல் பின்னணி கொண்ட ஒரு குறிப்பிட்ட குழு இருந்தது. எல்லோரும் இல்லை. ஒரு குறிப்பிட்ட குழு சில காலமாக குடும்ப வன்முறை மற்றும் பயங்கரவாதத்தில் ஈடுபட ஏற்பாடு செய்துள்ளது. இல்லை என்று சொல்ல முடியாது.

பாராளுமன்ற உறுப்பினர் எஸ். பி. திஸாநாயக்க:

இந்த சம்பவத்துக்கு மக்கள் விடுதலை முன்னணி, முற்போக்கு சோசலிச முன்னணி பொறுப்பு கூற வேண்டும். இவர்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
வரலாற்றிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளனர்.