மரணம் ஏற்படலாம் வைத்தியர் எச்சரிக்கை

அரசாங்கத்திற்கு வைத்தியர்கள் எச்சரிக்கை
Spread the love

மரணம் ஏற்படலாம் வைத்தியர் எச்சரிக்கை

வைத்தியர்களின் ஆலோசனையின்றி நோய் எதிர்ப்பு மருந்துகளை பயன்படுத்துவதால், உயிர்வாழ்வுக்குத் தேவையான பக்டீரியாக்கள்

மரணிக்கலாம் என குழந்தைகள் நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக மனிதன் 50 ஆண்டுகளுக்குள் மரணிக்கும் சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நோயெதிர்ப்பு மருந்துகள் பக்டீரியாக்களை வலுவிழக்கச் செய்யும் என்றும், அதிகப்படியான நன்மை பயக்கும் பக்டீரியாக்களும் இதனால் கொல்லப்படுகின்றன என்றும் வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மரணம் ஏற்படலாம் வைத்தியர் எச்சரிக்கை

எனவே மிகவும் அவசியமான சூழ்நிலைகளைத் தவிர, தேவையில்லாமல் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு மருந்துகளை வழங்க வேண்டாம் என்று அவர் பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒருவரின் வயது மற்றும் எடை உட்பட பல காரணிகளை கருத்தில் கொண்டே நோய் எதிர்ப்பு மருந்துகளை பயன்படுத்த வேண்டும் என குழந்தைகள் நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

“வைரஸ் காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்குக்கு நோய் எதிர்ப்பு மருந்துகள் தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருமல், சளி மற்றும் சிறு காயங்களுக்கு மருத்துவரின் பரிந்துரைப்படி நோய்
எதிர்ப்பு மருந்துகளை பயன்படுத்த முடியும் என குழந்தைகள் நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்