உருளைக்கிழங்கு சிப்ஸ் வீட்டில செய்யலாம் – இனி கடையில வாங்கவே மாட்டீங்க

உருளைக்கிழங்கு சிப்ஸ் வீட்டில செய்யலாம் - இனி கடையில வாங்கவே மாட்டீங்க
Spread the love

உருளைக்கிழங்கு சிப்ஸ் வீட்டில செய்யலாம் – இனி கடையில வாங்கவே மாட்டீங்க

உருளைக்கிழங்கு சிப்ஸ் வீட்டில செய்யலாம் ,நீங்கள் இனி கடையில வாங்கவே மாட்டீங்க .


அப்படியான மொறு மொறு சிப்ஸ், வீட்டில் சமையல் செய்வது எப்படி என்பதை இங்கே பார்க்கலாம் .

காசு இல்லை வாங்கி சாப்பிட முடியல என்கின்ற கவலை வேண்டாம் .நாங்களே .நம்ம வீட்டில செய்துக்கலாம் .

செய்முறை ஒன்று .

முதல்ல உருளைக்கிழங்கை அடுத்து அதன் தோல்களை சீவி எடுத்து கொள்ளுங்க .

அப்புறம் கரட் சீவும் சீவியில, வைத்து சீவி கொள்ளுங்க .
மலிகை கடையில உள்ள சிப்ஸ் அளவுக்கு அதில வெட்டி கொடுக்கும் .
நல்ல மெல்லிதாக வெட்டி எடுத்து உருளைக்கிழங்கை ,தண்ணியில போட்டு வைத்து கொள்ளுங்க .

தண்ணியில போட்டு மூன்று முறை நல்லா அலசி எடுத்து கொள்ளுங்க .
அப்புறம் நல்ல தண்ணி விட்டு உப்பு போட்டு கலந்து கொள்ளுங்க .

உப்பை நீரில் போட்டு பதின் ஐந்து நிமிடம் ஊற வைத்து விடுங்க .

அப்புறம் உருளைக்கிழங்கை தண்ணி வடித்து எடுங்க .

அப்புறம் கொட்டன் துணியில் உருளை கிழங்கை போட்டு, தண்ணி இல்லாம ஓத்தி எடுத்து கொள்ளுங்க

செய்முறை இரண்டு

கடாயில் எண்ணையை ஊற்றி ,அதுக்குள் உருளை கிழங்கை போட்டு குக் பண்ணுங்க .
நல்லாவே பிரட்டி விடுமாறு புரட்டி எடுங்க .

நன்றாக வெந்து வந்ததும் ,கடாயில இருந்து எடுத்து கொள்ளுங்க
சிப்ஸ் மொறு மொறு எண்ணு வந்திருக்கு பாருங்க .

இப்போ பாருங்க ,அசலாக மலிகை கடையில் வாங்கிய சிப்ஸ் போல இருக்கு .
சாப்பிடும் போது கூட, மொறு மொறு எண்ணு ரெம்பவே கிரிப்சியா இருக்கு .


இந்த சிப்ஸ் கூட கொஞ்ச மிளகாய் தூள் போட்டு, கலந்து கொள்ளுங்க .காரமாக இருக்க அது உதவியாக இருக்கும் .

இந்த உருளை கிழங்கை சாதம் கூட சேர்த்து சப்ப்பிட்டு பாருங்க .
இது கூடவே கொஞ்சம், தயிர் போட்டு சாதம் கூட சாப்பிட்டு பாருங்க செமையா இருக்கும் .அம்புட்டு சுவையை தரும் .

நான் வீட்டில் இப்படி சாதம் ,கறியுடன் இந்த சிப்ஸ் தவறாம சாப்பிட்டு வருவன்.முட்டை பொரியல் போல சுவையாக இருக்கும் .

ஏன்னா எனக்கு இந்த சிப்ஸ் ரெம்ப ரெம்பவே பிடிக்கும் .
இப்போ நாங்க இனி ,நம்ம வீட்டில் இந்த கடையில் விற்கும் தரத்தில், உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்து அசத்தலாம் .


இன்று உருளை கிழங்கு சிப்ஸ், எப்படி இருக்கு மக்களே .

சாப்பிடும் பொழுது எனக்கு கொஞ்சம் அனுப்பி வையுங்க மக்களே .

ஏன் என்றால் நான் உங்க வீட்டு பிள்ளை .

ஏன்னா இந்த உருளைக்கிழங்கு சிப்ஸ் ரெம்பவே எனக்கு பிடிக்குங்க .

Leave a Reply