ஈராக் அமெரிக்கா முகாம் ஈரான் குழு தாக்குதலில் சிதறியது படைகள் காயம்

ஈராக் அமெரிக்கா முகாம் ஈரான் குழு தாக்குதலில் சிதறியது படைகள் காயம்
Spread the love

ஈராக் அமெரிக்கா முகாம் ஈரான் குழு தாக்குதலில் சிதறியது படைகள் காயம்

ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவத்தின் Ain al-Asad விமான படை முகாம் மீது ஈரான் குழு நடத்திய தாக்குதலில் அந்த முகாம் சிதறியது ,இதில் பல படைகள் காயம் என அமெரிக்கா இராணுவம் தெரிவிப்பு .

இஸ்ரேல் காசா போர் ஆரம்பித்த நாள் முதல் அமெரிக்கா இராணுவம் ,இஸ்ரேலுக்கு ஆதரவாக போர் புரிந்து வருகிறது .

அதனை அடுத்தே மத்திய கிழக்கு நாடுகளான சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் ஆக்கிரமித்து நிலை கொண்டுள்ள அமெரிக்கா இராணுவ முகாம்கள் மீது ஈரான் ஆதரவு போராளி குழுக்கள் தொடராக தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளன .

அவ்விதம் நேற்று சனிக்கிழமை ஈராக்கில் அமைய பெற்ற Ain al-Asad airbase அமெரிக்கா விமான தளம் மீது ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டது .

இதன் பொழுது இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த ,அமெரிக்கா மற்றும் ஈராக் இராணுவ சிப்பாய்கள் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அமெரிக்கா இராணுவம் இழப்பை ஒப்பு கொண்டு அறிவித்துள்ளது .

ஈராக் அமெரிக்கா முகாம் ஈரான் குழு தாக்குதலில் சிதறியது படைகள் காயம்

இரான் போராளி குழுக்கள் அமெரிக்கா இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்த படுகின்ற பொழுது மட்டும் ,எமது இராணுவத்தினருக்கு சிறிய காயம் என அமெரிக்கா கூறி வருவது சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது .

ஆளணி சேதங்களை ஒப்பு கொண்ட பொழுதும் ஆயுத இழப்பு தொடர்பாக அமெரிக்கா படைகள் எதனையும் தெரிவிக்கவில்லை .

ஈராக்கிய பாராளுமன்றம் அமெரிக்கா ஆக்கிரமிப்பு படைகளை தமது மண்ணில் இருந்து விலகி செல்லுமாறு வேண்டுதல் விடுக்க பட்ட பொழுதும் ,அத்து மீறி ஈராக்கில் நிலை கொண்டுள்ளது குறிப்பிட தக்கது .

வீடியோ