இஸ்ரேல் போர் விமான தாக்குதலில் ஈரான் இராணுவ தளபதிகள் 5 பேர் பலி

இஸ்ரேல் போர் விமான தாக்குதலில் ஈரான் இராணுவ தளபதிகள் 5 பேர் பலி
Spread the love

இஸ்ரேல் போர் விமான தாக்குதலில் ஈரான் இராணுவ தளபதிகள் 5 பேர் பலி

இஸ்ரேல் போர் விமானங்கள் சிரியாவில் உள்ள ஈரான் இரகசிய உளவுத்துறை தலைமையகம் மீது நடத்திய தாக்குதலில் ,ஈரான் இராணுவ தளபதிகள் 5 பேர் பலியாகியுள்ளனர் .

சிரியா தலைநகரை அண்மித்து ஈரான் இராணுவத்தின் முக்கிய ரகசிய இராணுவ செயல்பாடுகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

அவ்வாறான மிக முக்கிய இராணுவ உளவுத்துறை கூட்டம் ஒன்று இடம்பெற்று கொண்டிருந்த பொழுது ,ஈரான் இரகசிய தளம் மீது இஸ்ரேல் போர் விமானம் ஏவுகணை தாக்குதலை நடத்தியது .

இந்த போர் விமான தாக்குதலில் ஈரான் நாட்டின் உளவுத்துறை தளபதி ,மற்றும் துணை உளவுத்துறை தளபதி உள்ளிட்ட ஐவர் வீரமரணம் அடைந்துள்ளதாக ஈரான் இராணுவம் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது .

இரான் இராணுவ உயர்மட்ட தளபதிகளை இலக்கு வைத்து இஸ்ரேல் மொசாட் உளவுத்துறை துல்லியமான இடைவிடாத தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .

இஸ்ரேல் போர் விமான தாக்குதலில் ஈரான் இராணுவ தளபதிகள் 5 பேர் பலி

ஈரான் நாட்டின் இராணுவ தளபதிகள் யாவரும் ,அதிகமாக இஸ்ரேல் போர் விமானம் நடத்திய ஏவுகணை தாக்குதல்கள் மூலமே ,படுகொலை செய்ய பட்டுள்ளனர் .

சக்தி வாய்ந்த அமைப்பாக காணப்பட்ட இஸ்ரேல் மொசாட் உளவுத்துறை ஹமாஸ் இரேலுக்குள் நுழைந்து தாக்குதலை நடத்துவதை மட்டும் எவ்வாறு தடுக்க மறந்தது என்ற கேள்வி இங்கே எழுப்ப படுகிறது .

தமது முதுநிலை தளபதிகள் படுகொலைக்கு உரிய பதிலடி வழங்க படும் என ஈரான் இராணுவ உயர் மட்டம் அறிவித்துள்ளது .

அப்படி என்றால் வரும் நாட்களில் இஸ்ரேல் மொசாட் இரான் குறிவைக்கிறது ,தாக்குதல் எங்கே என்பது தான் தெரியவில்லை .

காசா இஸ்ரேல் போர் உச்சகட்ட தாக்குதலாக இவை காணப்படுகின்றன .