இஸ்ரேல் போர் நடத்த மக்கள் எதிர்ப்பு இஸ்ரேல் தலைநகரில் வெடித்த போராட்டம்

இஸ்ரேல் போர் நடத்த மக்கள் எதிர்ப்பு இஸ்ரேல் தலைநகரில் வெடித்த போராட்டம்
Spread the love

இஸ்ரேல் போர் நடத்த மக்கள் எதிர்ப்பு இஸ்ரேல் தலைநகரில் வெடித்த போராட்டம்

இஸ்ரேல் போர் நடத்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ,இஸ்ரேல் தலைநகர் அருகில் உள்ள கைபா நகரில் மிக பெரும் போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர் .

காசா மீது இஸ்ரேல் நடத்தும் போர் உடனடியாக நிறுத்தி அமைதியை ஏற்படுத்த வேண்டும் என கோரி இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மக்கள் இனைந்து போராட்டம் நடத்துகின்றனர் .

கைபா துறைமுகம் அமைந்துள்ள முக்கிய பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இஸ்ரேலுக்கு காணப்படுகிறது .

அவ்வாறான அந்த கைபா துறைமுக நகர் பகுதி மீதுரொக்கட் ,ஏவுகணைகள்,வெடிகுண்டு போர் விமானங்கள் என்பன தாக்குதலை நடத்தி வருகின்றன .

இஸ்ரேல் போர் நடத்த மக்கள் எதிர்ப்பு இஸ்ரேல் தலைநகரில் வெடித்த போராட்டம்

அதனால் தமது வாழ்வாதாரம் மற்றும் வியாபாரம் என்பன பலத்த அடியை வாங்கி சுருண்டு இழப்பை சந்தித்து வருவதால் ,மேலும் இஸ்ரேல் போர் நடத்தி செல்ல அனுமதிக்க கூடாது என தெரிவித்து போராட்டம் நடத்துகின்றனர் .

பாலஸ்தீனம் காசா மீது இஸ்ரேல் போர் நடத்தி நூறு நாட்கள் கடந்துள்ள பொழுதும் ,இஸ்ரேல் ஆளும் பிரதமர் நெதன்யாகு எதிர்பார்த்த வெற்றியை பெற்று கொள்ள முடியவில்லை .

அதனால் இஸ்ரேல் உள்ளேயும் மக்கள் அச்சத்துடன் தமது அன்றாட வாழ்வை நடத்த வேண்டியுள்ள நிலையில் தற்போது ,இஸ்ரேல் காசா மீதான போரை நிறுத்த கோரி வீதி இறங்கி போராட்டம் நடத்துகின்றனர் .

மக்கள் ஜனநாயக போராட்டத்துக்கு தலை வணங்கி இஸ்ரேல் போரை நிறுத்துமா என்றால் அது கேள்வியாகவே உள்ளது .