முட்டை பிரியாணி செய்வது எப்படி இப்படி சுவையா செஞ்சு அசத்துங்க

முட்டை பிரியாணி குக்கரில் செய்வது எப்படி
Spread the love

முட்டை பிரியாணி செய்வது எப்படி இப்படி சுவையா செஞ்சு அசத்துங்க

முட்டை பிரியாணி செய்வது எப்படி என்கின்ற உங்கள் சந்தேகம் ,இந்த முட்டை பிரியாணி செய்வது எப்படி என்கின்ற குறிப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம் .

வீட்டில் மிகவும் இலகுவான முறையில் ,கடை சுவையில் எப்படி முட்டை பிரியாணி செய்வது என்பது தான் இங்கே நாம தரும் முக்கிய டிப்ஸ் .

அப்புறம் என்ன மக்களே கவலை விடுங்க ,இண்ணைக்கே வீட்டில செம ருசியாக,முட்டை பிரியாணி செஞ்சு அசத்துவோம் வாங்க .

முட்டை பிரியாணி செய்வது எப்படி ,செய்முறை குறிப்பு ஒன்று

வீட்டில் முட்டை பிரியாணி பண்ணுறதுக்கு இரண்டு கப்பு பசுமதி அரிசி எடுத்திருங்க ,அதனை நன்றாக தண்ணி ஊற்றி .மூன்று முறை நன்றாக கழுவி எடுத்து .அப்புறம் தண்ணி ஊற்றி நன்றாக ஊற வைத்திடுங்க .

இருபது நிமிடம் அரிசியை நன்றாக ஊற வைத்திடுங்க .


இப்போ அரசி ஊறும் வரைக்கும் ,நாம முட்டை பிரியாணி பண்ணுறதுக்கு தேவையான ஏனைய விடயங்களை செய்து கொள்வோம் .

இந்த பிரியாணிக்கு ஆறு முட்டை ,நன்றாக அவிய வைத்து ,முட்டை கோதுகளை அகற்றி எடுத்திருங்க .
முட்டை பிரியாணி பண்ணுறதுக்கு முட்டை தாங்க ரெம்ப முக்கியான பொருள் .

இப்போ இந்த முடடையை கொஞ்சம் மேலாக கத்தியால் கீறி விட்டிருங்க .

இப்போ இந்த முட்டையை கொஞ்சம் வறுத்து எடுக்கணும் .அதற்கு .
அடுப்பில சட்டியை வைத்து அதற்குள்ள எண்ணெய் ஊற்றி ,அரை கரண்டி மிளகாய் தூள் ,உப்பு ,மஞ்சள் பொடி ,சேர்த்து நன்றாக அந்த மசாலாவுக்குள் அந்த முட்டைகளை அப்படியே நன்றாக கலக்கி வறுத்து எடுத்திருங்க .

இப்போ பிரியாணி குக்கரில் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் .

குக்கரில் பிரியாணி செய்வதற்கு, அடுப்பில குக்கரை வைத்து அதற்குள் இரண்டு கரண்டி நெய்விட்டுருங்க .

நெய் சூடானதும் ,இரண்டு துண்டு பட்டை ,நான்கு கராம்பு ,நான்கு ஏலக்காய் ,ஒரு பிரிஞ்சி இலை ,கொஞ்சமா கல்பாசி ,ஒரு மராத்தி மொக்கு சேர்த்து ,கலக்கி விடுங்க .

நன்றாக வெந்து வந்த பின்னர் ,அதுக்கு அப்புறம் பொடியாக வெட்டிய இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து ,அந்த வெங்காயம் கலர் மாறி வரும் வரைக்கும் வதக்கி வாங்க .

இப்போ அது கூட இரண்டு பச்சை மிளகாய் ,புதினா கொத்த மல்லி இலை ,புதினா ,சேர்த்து நன்றாக வதக்கி வாங்க .

முட்டை பிரியாணி செய்வது எப்படி இப்படி சுவையா செஞ்சு அசத்துங்க

நன்றாக வதங்கிய பின்னர் ,அரைத்த இஞ்சி பூண்டு விழுது ,சேர்த்து நனறாக வதக்கி வாங்க .

இஞ்சி பூண்டு பச்சை வாசம் போனதன் பின்னர் ,மசாலா பொடி ,ஒரு கரண்டி மிளகாய் பொடி ,ஒரு கரண்டி கரம் மசாலா ,
அரை கரண்டி மஞ்சள் பொடி ,காரத்திற்கு ஏற்பட்ட மிளகாய் தூள் சேர்த்திடுங்க
.

அப்புறம் நன்றாக பொடியாக வெட்டி வைத்த தக்காளி சேர்த்து வதக்கி வாங்க .அதன் பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி வாங்க .

அதன் பின்னர் முட்டை பிரியாணிக்கு ஏற்ப தயிர் சேர்த்து கலந்து விடுங்க .எண்ணெய் பிரிந்து வரும் பதத்தில் மூன்று கப்பு தண்ணிர் விட்டிருங்க .

தண்ணிர் விட்டு கலந்து கொதித்த பின்னர் ,அப்புறம் ஊற வைத்த அரிசியை எடுத்து போட்டு நன்றாக கலந்து விடுங்க .

இப்போ மூடியை போட்டு மூடி வைத்திடுங்க .நன்றாக அரிசி வெந்த பின்னர் வறுத்து வைத்த முடடையை போட்டிருங்க .இது கூடவே புதினா இலை போட்டு ஐந்து நிமிடம் வேக வைத்திடுங்க .

இப்போ முட்டை பிரியாணி குக்கரில் செய்தாச்சு .
இப்படி தங்க முட்டை பிரியாணி செய்வது .

ரெம்ப சுவையான தரமான முட்டை பிரியாணி தயராகிடிச்சு .

அப்புறம் என்ன ஒரு புடி புடிக்கலாம் வாங்க .சமமா சொல்ல படைத்தது குக்கரில் செய்த முட்டை பிரியாணி செம மாஸ் சுவை தாங்க

Leave a Reply