மீன் குழம்பு இப்டி செய்ங்க எந்த மீன் வாங்கினாலும் உடனே காலியாகும்

மீன் குழம்பு இப்டி செய்ங்க எந்த மீன் வாங்கினாலும் உடனே காலியாகும்
Spread the love

மீன் குழம்பு இப்டி செய்ங்க எந்த மீன் வாங்கினாலும் உடனே காலியாகும்

மீன் குழம்பு இப்டி செய்ங்க எந்த மீன் வாங்கினாலும் உடனே காலியாகும்

வாங்க அப்படி பட்ட தரமான ,சுவையான, மீன் குழம்பு ,எப்படி இந்த முறையியல், சமையல் செய்வது என்பதை பார்க்கலாம் .

வீடுகளில் மீன் குழம்பு சமையல் ,சில வேளைகளில் தவறானதாக சுவை இல்லாமல் போகும் .

அப்படியானால் அங்கே விடுகின்ற தவறு என்ன ,அதை திருத்தி இப்படி நம்ம சமையல் கலை நிபுணர் செய்து அசத்துறாங்க .

வாங்க இப்போ மீன் குழம்பு செய்முறைக்குள் போகலாம் .

செய்முறை ஒன்று
நீங்க வாங்கும் எந்த மீன் என்றாலும் ,இந்த முறையில செய்துவாங்க ,அந்த மீன் குழம்பு ,செம சுவையாக இருக்கும் .
வாங்க இப்ப செய்முறைக்குள் போகலாம் .

மீன் குழம்பு இப்டி செய்ங்க எந்த மீன் வாங்கினாலும் உடனே காலியாகும்

முதல்ல இந்த மீன் குழம்பு செய்திட ,மிக்சியில் நான்கு வெங்காயம் போடுங்க ,கூடவே பூண்டு ,மிளகு ,இரண்டு கரண்டி மிளகாய் தூள் ,தக்காளி ,மூன்று மேசை கரண்டி அளவு மல்லி தூள் ,சேர்த்திருங்க .

இங்கே நாம் சேர்த்திருப்பது தனி குழம்பு மல்லி தூள் .நீங்க வேண்டும் என்றால் தனி மல்லி தூள் சேர்த்துக்கலாம் .

கூடவே இப்போ காரமான மிளகாய் தூளும் சேர்த்து கொள்ளுங்க .கூடவே தேவையான உப்பு , அதன் பின்னர் அரை கப்பு தண்ணி சேர்த்திட்டு நன்றாக மிக்சியில் அரைத்து எடுத்து கொள்ளுங்க .

இந்த அரையல் தான் மீன் குழம்புக்கு சுவையும் ,மனமும் கொடுக்க போகுது ,பார்க்கும் போதே அழகா இருக்கு பாருங்க .

ஒரு பாத்திரத்தில் மீன் குழம்புக்கு தேவையான, புளி எடுத்து ஊற வைத்து கொள்ளுங்க .இந்த புளியயை சூடு தண்ணியில ஊற வைத்து கொள்ளுங்க .சூடு தன்ணியில ஊற வைத்தால் சீக்கிரம் ஊறி வந்திடும் .

ஊறிய புளியை கை வைத்து நனறாக பிசைந்து கரைத்து கொள்ளுங்க .திக்க வரணும் .அது தான் மீன் குழம்புக்கு சுவையை அள்ளி தரும் .

செய்முறை இரண்டு

அடுத்து கடாய ( பாத்திரம் ) சூடாக்கி கொள்ளுங்க .இப்ப இதில நல் எண்ணெய் சேர்த்து கொள்ளுங்க.,அதன் பின்னர் கடுகு பொரிந்ததும் ,வெந்தயம் சேர்த்திருங்க ,கூடவே சீரகம் சேர்த்திடுங்க .
இப்போ சிறிதாக வெட்டி வைத்த வெங்காயம் சேர்த்திடுங்க .கூடவே பச்சை மிளகாய் ,பூண்டு சிறிதாக வெட்டி இதில் போட்டு வதக்கி வாங்க .

வெங்காயம் ஓரளவு வெந்ததும் ,கருவேப்பிலை போடுங்க .கருவேப்பிலை நன்றாக பொரிந்து வரும் வரைக்கும் காத்திருங்க .
அப்புறம் கூடவே உப்பு சேர்த்து வதக்குங்க ,உப்பு சேர்த்தால் வெங்காயம் சீக்கிரமா வதங்கிடும் .மீன் குழம்புக்கு கொஞ்சம் எண்ணெய் கூட செலவாகும் ,ஆனால் சுவையாக இருக்கும் .

வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் ,வெட்டி வைத்த தக்காளி சேர்த்திடுங்க .அப்படியே வதக்கி வாங்க ,தக்காளி வதங்கியதும் ,அரைத்து வைத்த பொருளை இதில் ஊற்றி வதக்கி வாங்க .

ரெம்ப நன்றாக மசாலா வந்ததும் ,இப்போ புளி சேர்த்திடுங்க ,தேவையான தண்ணி கொஞ்சம் சேர்த்திடுங்க .

குலமப்பு நன்றாக கொதித்து வரும் பொழுது ,தேங்காய் பால் சேர்த்து கொள்ளுங்க .
ஒரு கொதி வந்த பின்னர் ,மூடி போட்டு மூடி , காத்திருங்க .

கறியில் எண்ணெய் பிரிந்து வந்த பின்னர் ,மீனை சேர்த்திடுங்க .மீன் சேர்த்த பின்னர் இரண்டு நிமிடம் காத்திருங்க .மீன் மூன்று நிமிடத்தில் வெந்திருக்கும் .

ரெம்ப நேரம் மீன் வெந்தால் மீன் உடைந்து போகும் .
மெல்லிய நெருப்பில விட்டுடிருங்க .அப்புறம் அடுப்பை ஆப் பண்ணிருங்க
இப்போ மீன் குழம்பு ரெடியாடிச்சு .

இப்பொழுது இந்த மீன்குழம்பை ,சாதம் கூட சேர்த்து சாப்பிடுங்க
மீன் உடையாமல் இருக்க மீனை கடைசியாக தான் சேர்க்கணும் ,அது தான் மென் கறிக்கு உள்ள தந்திரம் ,

மீன் போட்ட பின்னர் கறிக்குள்ள மீனை கரண்டி போட்டு வார கூடாது .இப்போ தரமான மீன் குழம்பு இப்போ ரெடியாடிச்சு .

உண்மையிலேயே இந்த மீன் குழம்பு செமை தாங்க .இது மாதிரி இனி நீங்க செய்து வாங்க ,அட்டகாசமாக தரமான சுவையாக இந்த மீன் குழம்பு இருக்கும்..

வாயூறுது தலைவரே ,செம பசி ,ஒரு புடி புடிக்கலாம் வாங்க .

Leave a Reply