சிக்கன் பிரைடு ரைஸ் மிக சுவையாக செய்வது எப்படி-வீடே மணக்கும் சிக்கன் பிரைடு ரைஸ்

சிக்கன் பிரைடு ரைஸ் மிக சுவையாக செய்வது எப்படி-வீடே மணக்கும் சிக்கன் பிரைடு ரைஸ்
Spread the love

சிக்கன் பிரைடு ரைஸ் மிக சுவையாக செய்வது எப்படி-வீடே மணக்கும் சிக்கன் பிரைடு ரைஸ்

சிக்கன் பிரைடு ரைஸ் மிக சுவையாக செய்வது எப்படி . வீடே மணக்கும் சிக்கன் பிரைடு ரைஸ்
இன்று நாங்க செய்யலாம் வாங்க .

அதிக மக்கள் வாரத்தில் மூன்று தடவை விரும்பி உண்ணும் ,உணவுகளில் சிக்கன் பிரைடு ரைஸ் ஒன்றுங்க .

இது தமிழர்கள் மட்டுமல்ல ,வெள்ளையர்கள் கறுப்பினத்தவர்கள் யாவரும் விரும்பி உண்ணுவாங்க .
ஏன் என்றால் அம்புட்டு மவுசு, இந்த சிக்கன் பிரைடு ரைசுக்கு

சரி வாங்க, இப்போ எப்படி இந்த சிக்கன் பிரைடு ரைஸ் ,செய்வது என்பதை பார்க்கலாம் .

செய்முறை ஒன்று

இந்த சிக்கன் பிரைடு ரைஸ் செய்து கொள்ள .ஒரு பாத்திரம் எடுத்து கொள்ளுங்க .அதில மிளகாய் தூள் சேர்த்து கொள்ளுங்க .கூடவே மல்லி தூள் ,தேவையான உப்பு சேர்த்திருங்க .

ஒரு கரண்டி அரைத்த இஞ்சி சேர்த்திருங்க ,ஒரு கரண்டி அளவு வினிகர் சேர்த்து கொள்ளுங்க .
கூடவே ஒரு கரண்டி எண்ணெய் சேர்த்து கொள்ளுங்க .

இப்போ இது எல்லாத்தையும் ,ஒன்றோடு ஒன்று சேரும் வண்ணம் ,சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளுங்க .

இந்த பொடிக்குள்ள ,சிக்கன மரனேட் பண்ணிட ,செய்து கொள்ளும் கலவையாகும் .இதுக்குள்ள சிக்கனை தோய்த்து ஊறவைக்க போகிறோம் .

வெட்டி வைத்த சிக்கனை இதில போட்டு, நன்றாக மிக்ஸ் பண்ணுங்க .எலும்பு இல்லாத சிக்கன் சேர்த்து கொள்ளுங்க .அப்பா தான் ,இந்த கலவைகள் ஒன்றாக சேர்ந்திட நன்றாக இருக்கும் அதை மறந்திடாதீங்க .

நன்றாக கலக்கி, முப்பது நிமிடம் சிக்கனை ஊறவைத்து கொள்ளுங்க .

செய் முறை இரண்டு

இப்போ அடுப்பில கடாய சூடாக்கி ,அதற்குள்ள எண்ணெய் விட்டு கொள்ளுங்க ,இதுக்குள்ள தான் சிக்கன பொரிக்க போகின்றோம் .அதனால் அளவான எண்ணெய் விட்டு கொள்ளுங்க .

எண்ணையில் சிக்கன போடும் பொழுது ,ஒன்றோடு ஒன்று ஓடிக்காம பிரித்து போட்டு ,பொரியுங்க .அப்பா தான் பச்சையாக இல்லாம பொரிந்து வரும் .

நன்றாக பொரிந்த பின்னர் சிக்கனை எடுத்து வைத்து கொள்ளுங்க .

செய்முறை மூன்று
கடாயில ஒரு கரண்டி எண்ணெய் விட்டு ,அப்புறம் அதில இஞ்சி போடுங்க ,ஐந்து பல்லு பூண்டு வெட்டி போட்டு கொள்ளுங்க .

இது கூடவே வெட்டி வைத்த வெங்காயம் போட்டு சேருங்க .
அதையும் அப்படியே சேர்த்து வதக்கி கொள்ளுங்க .

வெங்காயம் சீக்கிரம் வதங்கி வர ,உப்பு சேர்த்தால் ,சீக்கிரமா வதங்கிடும் .

இப்போ இதில் நீங்கள் விரும்பும் காய்கறிகள் சேர்த்திடுங்க .நாம்ம இதில முட்டை கோவா சேர்த்திருக்கோம் .

இப்போ வெட்டி வைத்த கரட் ,பீன்ஸ் மற்றும் மிளகாய் போட்டு சேர்த்து கொள்ளுங்க .
நன்றாக வேகும் வரை வதக்கி வாங்க

இப்போ அடித்து வைத்த, இரண்டு முட்டையை ஊற்றி கொள்ளுங்க .முட்டை பொரிந்து வரும் பருவத்திலே காய்கறிகளை சேர்த்து நன்றாக வதக்கி வாங்க .
இப்போ பொரித்து வைத்த சிக்கனை போடுங்க .அதுக்கு அப்புறம் செஞ்சு வைத்த சாதம் ( சோறு )
சேர்த்து கொள்ளுங்க .

இப்போ நம்ம சிக்கன் பிரைடு ரைஸ் ,மிக சுவையாக செய்து முடிச்சாச்சு .

எல்லாரும் கையை கழுவிட்டு ,ஓடி வந்து எடுத்து சாப்பிட்டு கொள்ளுங்க .
அப்படியே சுவைத்து சாப்பிடும் ,இந்த சிக்கன் பிரைடு ரைஸ் எனக்கும் கொஞ்சம் அனுப்பி விடுங்க .

ஏன் என்றால் நீங்கள் ரெம்ப ரெம்ப நல்லவங்க .
செம்மையான ,சுவையான ,சிக்கன் பிரைடு ரைஸ் செய்து சாப்பிட்டாச்சு .இன்றைய பொழுது நன்றாக விடிந்தாச்சு ,வயிறு மகிழ்ந்தாச்சு .

இந்த சிக்கன் பிரைடு ரைஸ் வாசத்தில வீட மணக்குது .
அடுத்த தெரு மண மணக்கும் எங்க வீட்டு சிக்கன் பிரைடு ரைஸ் .

https://www.youtube.com/watch?v=cC3ZwX42_t4

Leave a Reply