இட்லி பொடி செய்வது எப்படி மிக சுவையாக இப்படி செய்ங்க

இட்லி பொடி செய்வது எப்படி மிக சுவையாக இப்படி செய்ங்க
Spread the love

இட்லி பொடி செய்வது எப்படி மிக சுவையாக இப்படி செய்ங்க

இட்லி பொடி செய்வது எப்படி ,என்கின்ற உங்கள் கேள்விக்கு இதோ ,செய்முறை விளக்கம் கீழ் உள்ளது .இப்படி வீட்டில் இட்லி பொடி நாள் தோறும் மிக சுவையாக செய்து அசத்துங்க மக்களே .

மிகவும் இலகுவான முறையில் இட்லி பொடி செய்திடலாம் .வாங்க இப்போ செய்முறைக்குள் போகலாம் .

.வீட்டில் இட்லி பொடி செய்வதற்கு முதல்ல அடுப்பில ஒரு கடாய சூடாக்கி ,அதன் பின்னர் அதில் அரை கப் அளவு கடலை பருப்பு போட்டு ,சிவக்கும் வரைக்கும் வறுத்து எடுங்க .

இட்லி பொடி செய்வது எப்படி மிக சுவையாக இப்படி செய்ங்க

சிவப்பாக வறு பட்டதன் பின்னர் அதனை பிறிம்பாக ஒரு தட்டில எடுத்து வைத்திடுங்க .

அதே கடாயில, இப்போ அரை கப் அளவு ,உருட்டு உளுத்தம் பருப்பு ,போட்டு நன்றாக சிவக்கும் வரைக்கும் வறுத்து வாங்க .


பொன்னிறமாக கலர் மாறி வந்ததும் , அதனை முதல் வறுத்த கடலை பருப்புடன் சேர்த்து ஆற வைத்திடுங்க .

அப்புறம் அதே கடாயில மூன்று மேசை கரண்டி, எள்ளு பெரிய வைத்து, வறுத்து எடுத்திடுங்க .எள்ளு வாசம் வரும் வரைக்கும் வறுத்து வாங்க .வறு பட்டதும் அப்புறம் அதனை தட்டில மாத்தி ஆற வைத்திடுங்க .

இப்போ அதே கடையில ,எண்ணெய் ஊற்றி தேவையான அளவு ,வறு மிளகாய் வறுத்து எடுத்திருங்க .
நான்கு நிமிடம் வரைக்கும், நன்றாக சிவக்கும் வரை மிளகாயை வறுத்து எடுத்திருங்க .

இப்போ உப்பு ,கால் கரண்டி பெருங்காயம் தூள், சேர்த்து நன்றாக எல்லாத்தையும் கலக்கி விடுங்க .

வறுத்து வைத்த யாவற்றையும் மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து எடுத்திடுங்க .


இப்போ நன்கு அரைத்த இட்லி பொடி ரெடியாகிடிச்சு . இதனை இட்லி கூட சேர்த்து சாப்பிடும் பொழுது செமையாக இருக்கும் .

ஐந்து நிமிடத்தில் இட்லி பொடி செய்தாச்சு .அம்புட்டு தாங்க வேலை .
மிகவும்இலகுவான முறையில் ,மிக சுவையான இட்லி பொடி வீட்டில் தயாராகிடிச்சு .

அப்புறம் என்ன மக்களே நீங்களும் வீட்டில் நாள் தோறும் இது போல இட்லி பொடி செய்து சாப்பிடுங்க .

Leave a Reply