மட்டன் குழம்பு சுவையா வர இந்த செய்முறை போதும்| Mutton Kulambu In Tamil | mutton gravy | mutton curry
மட்டன் குழம்பு வீட்டில் சுவையாக செய்வது எப்படி .இலகுவான முறையில் மிகவும் சுவையாக அசத்தலான மட்டன் குழம்பு ,| Mutton Kulambu In Tamil | mutton gravy | mutton curry வாய்க்கு சுவையாக செய்திடலாம் வாங்க .
தரமான மட்டன் குழம்பு செய்வது எப்படி
இலகு சுவையான மட்டன் குழம்பு செய்வதற்கு தேவையான பொருட்கள் என்ன ..?
வாங்க செய்முறைக்குள் போகலாம்
சுவையான மட்டன் குழம்பு செய்முறை ஒன்று
இந்த மட்டன் குழம்பு செய்திட அடுப்பில குக்கர் வைத்து, அதில இரண்டு கரண்டி எண்ணெய் விடுங்க .
இரண்டு கரண்டி மல்லி ,ஒரு கரண்டி சீரகம் ,சோம்பு ,ஒரு கரண்டி மிளகு ,ஏலக்காய் இரண்டு ,பட்டை,3 கராம்பு சேர்த்து நன்றாக வதக்கி வாங்க .
மட்டன் குழம்பு சுவையா வர இந்த செய்முறை போதும்| Mutton Kulambu In Tamil | mutton gravy | mutton curry
நன்றாக வறு பட்ட பின்னர் ,சின்ன வெங்காயம் ,ஒரு கைப்புடி பூண்டு ,இஞ்சி சேர்த்து நன்றாக வதக்கி வாங்க ,ஒரு கைப்பிடி அளவு தேங்காய் சொட்டு சேர்த்து வதக்கி வாங்க ,
பச்சை வாசம் போன பின்ன இரண்டு தக்காளி சேர்த்து வதக்கி வாங்க .நன்றாக வதக்கிய பின்னர் ,ஆற வைத்திடுங்க ,அரைத்து எடுக்கணும் .
இப்போ அரை கிலோ மட்டன் எடுத்து, அதில தயிர்,உப்பு ,மஞ்சள் தூள் ,ஒரு கரண்டி மிளகாய் தூள் போட்டு நன்றாக பிசைந்து மிக்ஸ் பண்ணுங்க , இந்த மட்டனை 30 நிமிடம் ஊற வைத்திடுங்க .
இப்போ மிக்சியில் ஆற வைத்தவற்றை ,மிக்சியில் போட்டு காரத்திற்கு ஏற்ப மிளகாய் தூள் ,தண்ணி சேர்த்து நன்றாக அரைத்து எடுங்க .
செய்முறை இரண்டு
இப்போ குக்கரில் எண்ணெய் விட்டு ,எண்ணெய் சூடானதும் ,கல்பாசி பூ ,பட்டை ,சோம்பு பொரித்த பின்னர் ,இப்போ ஊற வைத்த மட்டனை எடுத்து போட்டு மிக்ஸ் பண்ணி தேவையான அளவு தண்ணி சேர்த்திடுங்க .
இப்போ மூடி போட்டு மூடிவைத்து நனறாக மட்டன் வேக வைத்திடுங்க .மட்டன் நன்றாக வெந்த பின்னர் ,அரைத்து வைத்த மசாலா கலவையை சேர்த்து மிக்ஸ் பண்ணி வாங்க .உப்பு கூடவே தேவையான தண்ணி சேர்த்து வேக வைத்திடுங்க .
இப்போ மிக சுவையான தரத்தில் மட்டன் குழம்பு ரெடியாகிடிச்சு .
ரெம்ப திக்கான மட்டன் குழம்பு சாதம் ,இட்லி ,தோசை கூட சேர்த்து சாப்பிட்ட மாப்புள்ள சொல்லவே வேணாம் செம பிச்சு கிட்டு போகும் .
கடையில சாப்பிட்டது போல அம்புட்டு சுவை ,
அப்புறம் என்ன நீங்களும் வீட்டில் இதுபோல மட்டன் குழம்பு செய்து அசத்துங்க மக்களே .