பொலிஸ் கான்ஸ்டபிள் மீது தாக்குதல்

குற்றச் செயலில் ஈடுபட்ட 5 பொலிஸார் இடைநிறுத்தம் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு - திருகோணமலை மாவட்டங்களில் பொலிஸார் ஒழுக்கம் தவறி மேற்கொண்ட குற்றச் செயல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பொலிஸார் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக இன்று (23) பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார். மட்டக்களப்பு, வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த இரு பொலிஸாருக்கிடையே கடந்த 6 ஆம் திகதி மாலை ஏற்பட்ட கைகலப்பில் கல்லால் தாக்கிய சம்பவத்தில் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் காயமடைந்ததையடுத்து தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் வெளிவந்த பின் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து கடந்த 11 ஆம் திகதி ஏறாவூரைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மட்டக்களப்பு நகரில் வேலைபார்த்து வரும் கடையில் வேலை முடித்து கொண்டு இரவு 11 மணிக்கு நடந்து வீடுதிரும்பிக் கொண்டிருந்த இளைஞனை முச்சக்கரவண்டியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 3 பொலிஸார் இளைஞனை நிறுத்தி அச்சுறுத்தி அவரிடம் இருந்து 6,500 ரூபாவை பறித்தெடுத்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த 3 பொலிஸாரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட 3 பேரையும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டனர். அதேவேளை கடந்த 20 ஆம் திகதி கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையற்றி வந்த அதேபிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 150,000 ரூபா பெறுமதியான மாடு ஒன்றை திருடிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்த நிலையில் அவரும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார். இவ்வாறு குற்றச் செயல் காரணமாக கிழக்கு மாகாணத்தில் கடந்த 15 நாட்களில் 5 பொலிஸார் கைது செய்யப்பட்டு பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார்.
Spread the love

பொலிஸ் கான்ஸ்டபிள் மீது தாக்குதல்

பொலிஸ் கான்ஸ்டபிளை கும்பல் ஒன்று தாக்கிய சம்பவம் பதிவாகியுள்ளது.

நேற்று (12) இரவு உணவுப் பொதி ஒன்றை வாங்குவதற்காக களுத்துறை வடக்கில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்குச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பயாகலை பொலிஸ் கான்ஸ்டபிளே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

பொலிஸ் கான்ஸ்டபிள் மீது தாக்குதல்

முச்சக்கர வண்டியில் வந்த குழுவினரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் களுத்துறை வடக்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் கான்ஸ்டபிள் இதற்கு முன்னர் களுத்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றியவர் எனவும், அவ்வேளையில்

ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே அவர் தாக்கப்பட்டதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.