முட்டை பிரியாணி ஒரு முறை இப்டி செய்ங்க திரும்ப திரும்ப பிரியாணி செய்வீங்க

முட்டை பிரியாணி ஒரு முறை இப்டி செய்ங்க திரும்ப திரும்ப பிரியாணி செய்வீங்க
Spread the love

முட்டை பிரியாணி ஒரு முறை இப்டி செய்ங்க திரும்ப திரும்ப பிரியாணி செய்வீங்க

முட்டை பிரியாணி ஒரு முறை இப்டி செய்ங்க,வீட்டில திரும்ப திரும்ப இது மாதிரியே பிரியாணி செய்வீங்க.

நம்ம மக்கள் அதிகம் விரும்பி உண்பதில் பிரியாணி முதலிடம் வகிக்கிறது . இந்த பிரியாணி வகைகளில் முட்டை பிரியாணி ,மட்டன் பிரியாணி ,சிக்கன் பிரியாணி ,மரக்கறி பிரியாணி ,என பல வகைகள் உள்ளன .

இவற்றில் சிறுவர் முதல் பெரியவர்கள் அதிகம் விரும்பி உண்பதில் முட்டை பிரியாணி தரமான இடத்தில உள்ளது .

அவ்வாறு மக்கள் விரும்பும் முட்டை பிரியாணி ,ஒருமுறை இபப்டி செய்ங்க .
வீடே மணக்கும் நம்ம வீட்டு தமிழ் சமையல் முட்டை பிரியாணி .

வாங்க இப்போ முட்டை பிரியாணி செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் .

முட்டை பிரியாணி ஒரு முறை இப்டி செய்ங்க திரும்ப திரும்ப பிரியாணி செய்வீங்க

செய் முறை ஒன்று
இந்த முட்டை பிரியாணி செய்முறை சாதம் ( சோறு ) குலையாமல் முட்டை பிரியாணி செய்வது ,எப்படி என்பது தான் ,இங்கே முதன்மை பெறுகிறது .

இந்த முட்டை பிரியாணிக்கு நாம சீராக சம்பா அரிசியை பயன் படுத்த போகிறோம் .


ஒரு கப் அளவு சீராக சம்பா அரிசி எடுத்திருங்க .இதற்கு பதிலாகா பசுமதி அரசியும் நீங்க பயன் படுத்தலாம் .

இந்த சீராகி சம்பா அரிசியை, இரண்டு மூன்று முறை, நன்றாக தண்ணியில கழுவி எடுத்திருங்க .அப்புறம் தண்ணீர் ஊற்றி இருபது நிமிடம் ஊற வைத்திடுங்க .

அப்புறமா அடுப்பில பாத்திரம் வைத்த கொள்ளுங்க .அதில எண்ணெய் விட்டிருங்க .

எண்ணெய் சூடானது ஒரு கரண்டி மிளகாய் தூள் ,அரை கரண்டி மஞ்சள் தூள் ,அரை கரண்டி கரம் மசாலா ,சேர்த்திட்டு நன்றாக கலக்கி விடுங்க .

இதில் அவிச்ச முட்டை எடுத்து இது கூட சேர்த்து வறுத்தெடுக்க போகிறோம் .அந்த முட்டையை நான்கு பக்கம் வெட்டி வறுத்து எடுங்க .மசாலா முட்டையில் ஊறிடவும் ,வெடிக்காமாக இருக்கவும், இப்படி வெட்டி விடுங்க .

செய்முறை இரண்டு

அடுத்து குக்கர் சூடு படுத்திட்டு ,அதில் இரண்டு கரண்டி எண்ணெய் விட்டிடுங்க .ஒரு தேய் கரண்டி நெய் சேர்த்திடுங்க .

இந்த நெய் நன்றாக சூடானதும் ,கராம்பு பட்டை, பிரிஞ்சி இலை, ஏலக்காய் ,ஒரு கல்பாசி ,ஒரு ஸ்டார் பூ சேர்த்திடுங்க .

வெட்டி வைத்த வெங்காயம் சேர்த்திடுங்க ,தேவையான உப்பு சேர்த்திடுங்க .
நன்றாக வதங்கி வரும் வரை வெங்காயத்தை வதக்கி வாங்க .

வெங்காயம் கலர் மாறியதும் ,இரண்டு பச்சை மிளகாய் ,புதினா இலை ,கொத்த மல்லி இலை சேர்த்திடுங்க .
புதினா இலை சேர்த்திடுங்க ,அது முட்டை பிரியாணிக்கு ரெம்பவே சுவையை கொடுக்கும் .

அரைத்து வைத்த இஞ்சி சேர்த்திடுங்க .
அதையும் சேர்த்து வதக்கி வாங்க .இஞ்சி பச்சை வாசம் போகும் வரைக்கும் வதக்கி வாங்க .


இஞ்சி பச்சை வாசம் போன பின்ன, வெட்டி வைத்த தக்காளி சேர்த்திடுங்க ,அதையும் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணி வாங்க .

தக்காளி நன்றாக வதங்கிய பின்னர் ,மசாலா சேர்த்திடுங்க .ஒண்றரை கரண்டி காஸ்மீர் மிளகாய் தூள் சேர்த்து கொள்ளுங்க .கூடவே ஒரு கரண்டி கரம் மசாலா சேர்த்திடுங்க .

ஒரு கரண்டி மல்லி தூள் சேர்த்திடுங்க ,கடைசியாக ஒரு கரண்டி பிரியாணி மசாலாவும் சேர்த்திடுங்க .நம்ம பயன் படுத்துவது வீட்டு தயாரிப்பு பிரியாணி மசாலா .

இந்த பிரியாணி மசாலா சேர்த்து வதக்கும் போது பிரியாணி வேற லெவலுக்கு எடுத்து போகும் ,அம்புட்டு சுவையாக இருக்கும் .

இப்போ வதக்கியதில் தயிர் சேர்த்து கொள்ளுங்க .தயிர் சேர்தவுடன் நன்றாக மிக்ஸ் பண்ணி இருங்க .
தொக்கு மாதிரி வந்தவுடன் . தண்ணிர் சேர்த்திடுங்க .

ஒரு காப்பு அரசிக்கு ,ஒன்றை முக்கால் கப்பு தண்ணி கணக்கா இருக்கும்,அதை கவனத்தில் வைத்து கொள்ளுங்க .

பழைய அரசிய கண்டு பிடிப்பது எப்படி ,அதிக கழிவு வந்தால் அது பழைய அரிசியாகும் ,
அப்படி என்றால் இரண்டு காப்பு பிரியாணிக்கு தண்ணீர் விட்டிருங்க .

இப்போ இதற்குள் அரசி சேர்த்திடுங்க .எலுமிச்சம் பழம் பிழிந்து விடுங்க .
கடைசியாக ஒரு கரண்டி நெய் சேர்த்திடுங்க .

இப்போ இதற்குள்ள வறுத்து வைத்துள்ள ,முட்டை போட்டு கொள்ளுங்க .

இப்போ அரசி வேகி வந்திருக்கு ,இப்போ குக்கரை மூடி போட்டு வேக வையுங்க .

பத்து நிமிடம் வைச்சிருங்க .இப்போ பத்து நிமிடம் கழிந்த பின்னர் ,சுவையான சீராக சம்பா அரிசியில் முட்டை பிரியாணி ரெடியாகிடிச்சு

இது போல நீங்களும் முட்டை பிரியாணி செய்து சாப்பிடுங்க .

மக்களே சமையல் தமிழ் முட்டை பிரியாணி எப்படி இருக்கு சொல்லுங்க .

இன்று முட்டை பிரியாணி செமையா இருக்கு .தலைவா .

Leave a Reply