17 மில்லியன் ரூபாவுக்கு நடவடிக்கை எடுக்க முடியாது

கோட்டபாயா அமெரிக்கா சென்றால் கைதாவார்
Spread the love

17 மில்லியன் ரூபாவுக்கு நடவடிக்கை எடுக்க முடியாது

2022 ஆம் ஆண்டு அரசுக்கெதிரான மக்கள் போராட்டத்தின் போது அப்போது பதவியிலிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் அவருடைய அறையிலிருந்து கைப்பற்றப்பட்ட 17.8 மில்லியன்

ரூபாய் பணம் தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் இனிமேல் முன்னெடுக்கப்படாது என இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அறிவித்துள்ளது.

போதுமான ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்கள் இன்மையால் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக நீதித்துறைக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் (புதன்கிழமை 18) குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் குறித்த விடயம் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டது.

17 மில்லியன் ரூபாவுக்கு நடவடிக்கை எடுக்க முடியாது

முன்னதாக, கைப்பற்றப்பட்ட பணத்தை தன்னிடம் மீண்டும் கையளிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகேவினால் இவ்வருடம் பெப்ரவரி மாதம் நிராகரிக்கப்பட்டது.

2022 ஜூலை இல் நடைபெற்ற அரசுக்கெதிரான மக்கள் போராட்டத்தின் போது போராட்டகாரர்கள் கோட்டையிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தை முற்றுகையிட்டனர்.

அப்போது கோட்டாபயவின் அறையிலிருந்து கிட்டத்தட்ட 17.8 மில்லியன் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது.

கைப்பற்றப்பட்ட பணத்தை போராட்டகாரர்கள் கணக்கிட்டு கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

அதனையடுத்து குற்றப்புலனாய்வுப் பிரிவினர் சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.