தமிழர் பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள்

தமிழர் பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள்
Spread the love

தமிழர் பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழர் பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள் அதிகரித்து காணப்படுவதாகவும்,

குறிப்பாக தேசிய பாடசாலைகளில் தான் அரசியல் தலையீடுகள் தற்போது அதிகரித்து வருவதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது..

வட மாகாணத்தில்

குறிப்பாக வட மாகாணத்தில் யாழ்ப்பாணத்திலுள்ள தேசிய பாடசாலையான யாழ் மத்திய கல்லூரியில் புதிதாக நியமிக்கப்பட்ட ஒரு அதிபரை கூட மாற்றியிருக்கின்ற ஒரு செயற்பாடு நடந்திருக்கிறது.

இதே போன்று தான் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பிலுள்ள தேசிய பாடசாலையான பட்டிருப்பு கல்லூரியிலும் அரசியல் தலையீடுகளுடனான சம்பவம் ஒன்று நடைபெற்றிருக்கின்றது.

அங்கும் நியமிக்கப்பட்ட அதிபரை மாற்றி வேறு ஒருவரை தற்போது நியமித்திருக்கின்றர்.

அங்குள்ள அரசியல்வாதியானபிள்ளையான் கல்வி அமைச்சுடன் பேசி இந்த மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கின்றார்.

அரசியல் நலன்களுக்காக கல்வியிலும் அரசியல் தலையீடு

தமது அரசியல் நலன்களுக்காக கல்வியிலும் அரசியல் தலையீடுகளை பாடசாலைகளில் செய்ய முயல்வது உண்மையில் ஒரு தவறான செயற்பாடாகும்.

எனவே பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள் மேற்கொள்வதை அரசியல்வாதிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும். கல்வி அமைச்சும் அதிகாரிகளும் இதற்கு இடமளிக்ககூடாது.

இதனால் தான் வடக்கு கிழக்கு மாகாணங்கள் உள்ள இந்த பாடசாலைகளின் முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அரசியல் தலையீடுகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் நாம் கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றோம்..

தேர்தலில் வெல்ல அரசியல் நுழைவு

தேர்தல் வருகின்றதால் தமக்கான ஆதரவை பெருகி கொள்வதற்கே அரசியல்வாதிகள் இவ்வாறான செயற்பாடுகளை தற்போது தீவிரமாக முன்னெடுக்கின்றனர்.

இதனை நிறுத்த வேண்டும் என்று கல்வி அமைச்சிடம் கூறிய போது, நிறுத்துவதாக சொல்லி இருக்கின்றார்கள். ஆனால் இதுவரையில் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை.

இவ்வாறு நியமனங்கள் மட்டுமல்ல சில முறையான இடமாற்றங்களில் கூட அரசியல்வாதிகளின் தலையீடுகள் காணப்படுகின்றன.

இத்தகைய செயற்பாடுகள் கல்வியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் தான் கல்வியில் அரசியல் தலையீடுகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று நாம் கூறுகின்றோம்.

மேலும் முழு இலங்கையிலும் இருக்கின்ற சுற்றறிக்கை வடமாகாணத்தில் பல சந்தர்ப்பங்கள் பல இடங்களில் ஆசிரியர்கள் விடயத்தில் மீறப்பட்டு வருகிறது.

ஆகவே சுற்றறிக்கையை மீறி செயற்படுவதை நிறுத்த வேண்டும் என்றும் கூறுகின்றோம்.

மேலும் இந்த வருடம் மே தினத்தை யாழ்ப்பாணத்தில் செய்ய தீர்மானித்திருக்கின்றோம். இதில் விசேஷமாக அதிபர், ஆசிரியர்கள் முகம் கொடுக்கிற பிரச்சினைகள் மட்டுமில்லாமல்,

இந்த அரசாங்கம் கொண்டு வந்திருக்கின்ற அடக்குமுறை சட்டங்கள் பேச்சுரிமை தொழிலுரிமை பயங்கரவாத எதிர்ப்பு போன்ற சட்டங்கள் உட்பட பல்வேறு சட்டக்களுக்கு எதிராகவும் அனைவரதும் உரிமைகளை வலியுறுத்தி இதனை செய்கிறோம்.

ரணில் விக்கிரமசிங்க அரசுக்கு ஒரு உரிமையும் இல்லை

எனவே மக்களுக்கு இருக்கின்ற உரிமையை மாற்றுவதற்கு ரணில் விக்கிரமசிங்க அரசுக்கு ஒரு உரிமையும் இல்லை.

ரணில் ராஜபக்ச அரசாங்கம் மக்களுக்கு எதிரான சட்டங்களை கொண்டு வந்தது மட்டுமல்லாமல் கல்வியில் கூட திருத்தங்கள் என்ற பெயரில் புதிய கொள்கைகளை கொண்டு வர முயன்றிருக்கின்றார்கள்.

இவ்வாறான திருத்தங்கள் அல்லது புதிய கொள்கைகளை கொண்டு வந்து இந்த நாட்டில் உள்ள இலவச கல்வி முறை இல்லாமல் ஆக்குகின்ற ஒரு செயற்பாட்டை தான் இவர்கள் செய்யப் போகின்றார்கள்.

இது இலவச கல்வியை காசுக்கு கொடுக்கிற செயற்பாட்டைதான் அரசாங்கம் முன்னெடுக்கின்ற ஆபத்து உள்ளது.

இதேபோன்று இப்போது பாடசாலைகளை மூடுகின்ற செயற்பாட்டுகளை ரணில் ராஜபக்ச அரசாங்கம் முன்னெடுக்கின்றது.

இது அந்தந்த பிரதேசங்களில் இருக்கின்ற மக்களின் உரிமையை பறிக்கின்ற ஒரு செயற்பாடாகவே இந்த அரசின் செயற்பாடுகள் அமைகின்றன.

அது மட்டுமல்லாமல் பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் காசு கொடுத்து படிக்க வேண்டிய ஒரு செயல்பாட்டையும் இவர்கள் செய்ய பார்க்கின்றார்கள்.

அடக்குமுறை சட்டங்கள்

இந்த அரசாங்கம் கொண்டு வருகின்ற அடக்குமுறை சட்டங்கள் கல்வியை விற்கின்ற சட்டங்கள் ஆசிரியர், அதிபர்கள் முகம் கொடுக்கின்ற பிரச்சனைகள் சம்பளம் முரண்பாடுகளை பிரச்சனையை தீர்க்கிறது.

இப்படியான பல பிரச்சினைகளை முன் வைத்து தான் இலங்கை ஆசிரியர் சங்கம் வருகின்ற மே முதலாம் திகதி யாழ்ப்பாணத்தில் எமது மே தினத்தை நடத்துவதற்கு தீர்மானித்திருக்கிறது.

இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்ப்பட வேண்டுமென அரசாங்கத்திற்கு அழுத்தமாக நாம் கூறுகிறோம்.

அப்படி அரசாங்கம் செய்யாத விடத்து ஏனைய தொழிற்சங்கங்களை ஒன்றிணைத்து நாம் போராட்டங்களை முன்னெடுப்போம்.

உண்மையிலே மக்கள் விரோத, மாணவர் விரோத, ஆசிரியர் விரோத செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு ரணில் விக்கிரமசிங்கவிற்கு எந்த உரிமையும் இல்லை.

ஏனென்றால் அவர் மக்கள் ஆணையில்லாத ஒரு ஜனாதிபதி, அவர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு ஜனாதிபதி அல்ல.

ஆனாலும் பெரமுனவின் 134 வாக்குகளை வைத்து தான் அவர் எல்லாத்தையும் செய்கின்றார்.. அவ்வாறு அவர் செய்கின்ற அனைத்தும் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளாகத்தான் இருக்கிறது.

தேர்தலும் இல்லை

குறிப்பாக தேர்தல் வைக்கிறேன் வைக்கிறேன் என்று சொல்லி ஓரு தேர்தலும் இல்லை. அவ்வாறு தேர்தல் என்பது வெறுமனே பேசு பொருளாக மட்டுமே இருக்கிறது.

மக்கள் தங்களுடைய பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கு அல்லது தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்துவதற்கு அந்த மக்களுக்கு இருக்கின்ற உரிமையை வாய்ப்பை அளிக்காத ரணில் ராஜபக்ச அரசாங்கம், மறுபக்கத்தில் கல்வி உட்பட நாட்டின் எல்லா உரிமையும் அழிக்கின்ற செயற்பாடுகளை தான் செய்கின்றது என்றார்.