வட கொரியா இரண்டு ஏவுகணை சோதனை

வட கொரியா இரண்டு ஏவுகணை சோதனை
Spread the love

வட கொரியா இரண்டு ஏவுகணை சோதனை

கடந்த தினம் வட கொரியா அதன் கிழக்கு கடற்பகுதியை நோக்கி ,
இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவிய சோதனை நடத்தியது .

வட கொரியாவின் தலைநகர் பகுதியில் இருந்து ஏவப்பட்டு,
சுமார் 780 கிலோமீட்டர்கள் (480 மைல்) பயணம் செய்து,
கொரிய தீபகற்பத்திற்கும் ஜப்பானுக்கும் இடையே உள்ள,
கடல் பகுதியில் வீழ்ந்து வெடித்தது .

வட கொரியா இரண்டு ஏவுகணை சோதனை

ஜப்பானின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்குள் ,
ஏவுகணைகள் தரையிறங்கியதாக ஜப்பான் பிரதமர் தெரிவித்துள்ளார் .
இது சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை அச்சுறுத்தும்,
வன்முறை நடவடிக்கை என்று அவர் தெரிவித்தார் .

தென் கொரிய மற்றும் அமெரிக்க துருப்புக்கள் ஐந்தாவது பெரிய அளவிலான ,
நேரடி பயிற்சிகளை முடித்த ,
சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த சோதனை நடத்த பட்டுள்ளது ,.

தென்கொரிய, அமெரிக்கா , ஜப்பான் ,இணைந்து வடகொரியாவை ,
தாக்குவோம் என மிரட்டி வரும் நிலையில் ,அதற்கு பதிலடியாக,
வடகொரியா ஏவுகணை சோதனையை நடத்திய வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .