முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் விசாரணை தேவை சஜித்

முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் விசாரணை தேவை சஜித்
Spread the love

முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் விசாரணை தேவை சஜித்

முல்லைத்தீவு நீதிபதியின் பதவி விலகல் மிகவும் பாரதூரமான விடயமாகும் என்றும், இது நீதித்துறை சுதந்திரம் சார் பிரச்சினை என்றும், அவருக்கு கொலை மிரட்டல்களும், அழுத்தங்களும் வந்ததாக கூறப்பட்டுள்ளதாகவும்,

இது ஒரு பாரதூரமான அறிவிப்பு என்பதால், சுதந்திரமான விசாரணை நடத்தப்பட்டு, இதன் பின்னனியில் உள்ள உண்மை குறித்து இந்த சபைக்கு

அறிவிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(03) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதேவேளை, அரசாங்கம் சகல பக்கங்களிலிருந்தும் மக்களின் பேச்சுச் சுதந்திரத்தை இல்லாதொழிக்கவும், ஜனநாயகத்தை இல்லாதொழிக்கவும்

தயாராகி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (3) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில்,அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்தால், சிறையில் அடைக்க வாய்ப்பு உள்ளதாகவும்,நிகழ் நிலை காப்பு சட்டத்தின்

ஊடாக இவ்வாறான தண்டனைகளை விதிக்கவும் வாய்ப்பு உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் விசாரணை தேவை சஜித்

அப்பிள், அமேசான், கூகுள், மொட்டா, எக்ஸ், புக்கிங்.காம் போன்றவற்றை உள்ளடக்கிய Asia Internet Coalition கடுமையான எதிர்ப்பை

வெளியிட்டுள்ளதாகவும், இவர்கள் நாட்டை விட்டு வெளியேறினால் வெளிநாட்டு முதலீடுகள் வீழ்ச்சியடையும் என்றும் எதிர்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நிகழ் நிலை காப்பு சட்டமூலத்தை கொண்டு வந்து இன்று என்ன நடந்துள்ளது என்று சிந்தித்து பார்க்குமாறும்,ஆசிய இன்டர்நெட் கூட்டமைப்பானது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகவும், இவற்றை விரட்டியடுத்து

விட்டால் சர்வதேச முதலீட்டை எவ்வாறு பெற்றுக்கொள்ள முடியும் என்றும், நிகழ் நிலையில் எவ்வித பாதுகாப்பும் இல்லை என்றும்,அரசாங்கத்தின்

பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், ஜனாதிபதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் எடுக்கும் முயற்சியே இதுவாகும் என்றும்,இது

சர்வாதிகாரமான தவறானதோர் திட்டமாகும் என்பதனால் இதை வாபஸ் பெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.