பிரகாஷ்ராஜ் பெண்ணுக்கு செய்த வேலை வைரலாகும் சமாச்சாரம்

பிரகாஷ்ராஜ் பெண்ணுக்கு செய்த வேலை வைரலாகும் சமாச்சாரம்
Spread the love

பிரகாஷ்ராஜ் பெண்ணுக்கு செய்த வேலை வைரலாகும் சமாச்சாரம்

இந்தத் தகவல் உண்மைதானா”
என்று கேட்டார் பிரகாஷ்ராஜ்.அந்த செய்தி ஏதோ ஒரு இணைய தளத்தில் வெளி வந்திருந்தது.


தந்தையை இழந்த ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவிக்கு பல்கலைக்கழக மேற்படிப்புக்காக
கல்வி உதவி தேவைப்பட்டது.


தற்செயலாக இதை பார்த்தார் ‘மூடர்கூடம்’ படத்தின் இயக்குனர் நவீன்.
பலரிடமும் இந்த செய்தியை பகிர்ந்து கொண்ட நவீன், நடிகர் பிரகாஷ்ராஜிடமும் இந்த செய்தியை சொன்னார்.

பிரகாஷ்ராஜ் பெண்ணுக்கு செய்த வேலை வைரலாகும் சமாச்சாரம்


அப்போதுதான் பிரகாஷ்ராஜ் கேட்டார். “நீங்கள் கேள்விப்பட்ட இந்த செய்தி உண்மைதானா ?””உண்மைதான் சார்.

நான் விசாரித்து விட்டேன். அந்தப் பெண்ணின் உறவினரிடமும் தொலைபேசியில் பேசி,
அந்த மாணவியின் நம்பரை கூட வாங்கிவிட்டேன்.”


பிரகாஷ்ராஜ் அந்தப் பெண்ணிடம் பேசினார். கன்ணீரோடு அந்த மாணவி சொன்ன விஷயம் இதுதான்.


அவளுக்கு ஒன்பது வயதாக இருக்கும்போதே தந்தை இறந்து விட்டார். அவரது அம்மா எப்படியோ கஷ்டப்பட்டு தன் மகளை பட்டப்படிப்பு வரை படிக்க வைக்க.

இப்போது அந்த மாணவி இங்கிலாந்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படிக்க ஆசைப்படுகிறார்.

ஆனால் இங்கிலாந்து செல்வதற்கான செலவு, பல்கலைக்கழக கல்விக்கட்டணம், ஹாஸ்டல் கட்டணம் எதையுமே அந்தப் பெண்ணால் நினைத்துக்கூட பார்க்க முடியாது.

அவ்வளவு கஷ்டப்பட்ட குடும்பம்.
அமைதியாக இதை கேட்டுக் கொண்டிருந்தார் பிரகாஷ்ராஜ்.
அடுத்த சில நிமிடங்களிலேயே அந்த நல்ல முடிவை எடுத்தார்.


இது 2020 இல் நடந்தது. இப்போது அந்தப் பெண் ஸ்ரீ சாந்தனா
இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் படித்து பட்டமும் வாங்கிவிட்டார்.


இன்னொரு காரியத்தையும் கூட செய்திருக்கிறார் பிரகாஷ்ராஜ்.
அந்தப் பெண்ணின் உயர் படிப்புக்கு ஏற்ற நல்ல ஒரு வேலை கிடைப்பதற்கு, தன்னாலான அத்தனை உதவிகளையும் செய்து கொடுத்திருக்கிறார்.


அந்தப் பெண்ணும் அவரது தாயாரும் எல்லையற்ற சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.

பிரகாஷ்ராஜையும் நேரில் சந்தித்து தங்கள் நன்றியை சொல்லி இருக்கிறார்கள்.


மனநிறைவோடு அந்தப் பெண்ணை வாழ்த்தி அனுப்பி இருக்கிறார் பிரகாஷ்ராஜ்.


இந்தத் தகவலை பிரகாஷ்ராஜ் கவனத்துக்கு கொண்டு போன இயக்குனர் நவீன், ட்விட்டர் மூலம் பிரகாஷ்ராஜுக்கு நன்றி சொல்லியிருக்கிறார்.


அதற்கு பிரகாஷ்ராஜ் சொன்ன பதில்:
“இந்த உலகம் எனக்கு என்ன கொடுத்ததோ, அதை திருப்பிக் கொடுக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது.

அந்தக் கடமையை நான் செய்திருக்கிறேன், அவ்வளவுதான்.”
அந்த மனசு தான் கடவுள்.
படித்ததில் பிடித்தது.

Leave a Reply