நாடு எப்படி உருப்படும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி எஸ்.ஸ்ரீதரன்

மகிந்தா குடும்பம் விசாரிக்க படவேண்டும் ஸ்ரீதரன்
Spread the love

நாடு எப்படி உருப்படும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி எஸ்.ஸ்ரீதரன்

ஒரு பிரமாண்டமான இராணுவ வலயகமாவே வடக்கு, கிழக்கை இப்போதும் வைத்துக்கொண்டு பாதுகாப்புக்கு வரவு-செலவுத்திட்டத்தில் 15.2 வீதம் நிதியை ஒதுக்கினால் இந்த நாடு எப்படி உருப்படும்? பொருளாதாரத்தில் எப்படி நிமிரும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி எஸ்.ஸ்ரீதரன் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (13) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக்கொள்கைகள் அமைச்சுக்கான செலவுத்தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

இம் முறை கொண்டுவரப்பட்ட வரவு – செலவுத்திட்டத்தின் ஊடாக பலவிடயங்கள் மறைக்கப்பட்டுள்ளன.

சென்ற வருடமும் வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக தேர்தல்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டது. எம்.பி.க்களுக்கான நிதி ஒதுக்கப்பட்டது.

செயல்பாடுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் அவையெல்லாம் இப்போதும் அறிக்கையாக வேபாராளுமன்றத்தில் உள்ளன. இம் முறையும் பல புதிய ,புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நாடு எப்படி உருப்படும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி எஸ்.ஸ்ரீதரன்

இந் நிலையில் செவ்வாய்க்கிழமை அமைச்சர் பவித்திரா தேவி வன்னியாராச்சியுடன் பேசும் போது யாழ்ப்பாணத்திற்கு நதி ஒன்றைக்கொண்டு வரப்போவதாக கூறினார்.

யாழ்ப்பாண நதி என்பது புதிய சொற்றோடர். ஆனால் இங்கே சொல்கின்றவை எல்லாம் நடை பெறுமா அல்லது இந்த வரவு-செலவுத்திட்டம் அதனை நடைமுறைப்படுத்துமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இம் முறை வரவு-செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு 423.7 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது மொத்தமான வரவு செலவுத்திட்டத்த்தில் 11.6 சதவீதம்.

பொது பாதுகாப்புக்கு 140.7 பில்லியன் ரூபா .இது மொத்த வரவு-செலவுத்திட்டத்தில் 3.6 வீதம். எனவே வரவு செலவுத்திட்டத்தில் 15.2 சதவீதமான நிதி பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

நாடு எப்படி உருப்படும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி எஸ்.ஸ்ரீதரன்

இந்த நாட்டில் தற்போது யுத்தம் இல்லை. எங்கேயும் குண்டு சத்தங்கள் இல்லை. யாரும் துப்பாக்கி தூக்கியதாக தெரியவில்லை.

ஆனால் இந்த நாட்டில் உள்ள 2 இலட்சம் வரையிலான படைகளை வடக்கு, கிழக்கில் தான் வைத்துள்ளீர்கள்.

ஒரு பிரமாண்டமான இராணுவ வலயகமாவே வடக்கு, கிழக்கு இப்போதும் உள்ளது. இவர்களுக்கு இவ்வளவு நிதியை ஒதுக்குவதென்றால் நாட்டின் பொருளாதாரம் எப்படி வளர முடியும் எனக்கேள்வி யெழுப்பினார்.

வீடியோ