ஈஸ்டர் தாக்குதல் குற்றச்சாட்டிலிருந்து DIG விடுவிப்பு

ஈஸ்டர் தாக்குதல் குற்றச்சாட்டிலிருந்து DIG விடுவிப்பு
Spread the love

ஈஸ்டர் தாக்குதல் குற்றச்சாட்டிலிருந்து DIG விடுவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டில் இருந்து சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவினால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விடுவிப்பு தொடர்பில் தேசிய பொலிஸ் ஆணைக்குழு கடந்த வருடம் டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி பொலிஸ் தலைமையகத்திற்கு எழுத்து மூலம் உத்தியோகபூர்வமாக அறிவித்தது. இது தொடர்பான அறிக்கையின் பிரதிகள் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

அன்றைய மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க, கொழும்பு மாவட்டத்திற்கு பொறுப்பாக இருந்த தேசபந்து தென்னகோன், லலித் பத்திநாயக்க மற்றும் நிலாந்த ஜயவர்தன

(முன்னாள் அரச புலனாய்வு தலைவர்) ஆகியோர் ஈஸ்டர் தாக்குதலைத் தடுக்கத தவறியதற்கான குற்றச்சாட்டை எதிர்கொண்டனர்.

ஈஸ்டர் தாக்குதல் குற்றச்சாட்டிலிருந்து DIG விடுவிப்பு

குற்றப்பத்திரிகைகள் வழங்கப்பட்டு, இடமாற்றங்கள் செய்யப்பட்டு, முதற்கட்ட விசாரணைகள் தொடங்கப்பட்ட நிலையில், விசாரணைகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. எவ்வாறாயினும், ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு, இந்த பொலிஸ் அதிகாரிகளை அழைத்து வாக்குமூலங்களை பதிவு செய்து தனது நடவடிக்கைகளை தொடர்ந்தது.

கடந்த ஆண்டு ஏப்ரல் 24 ஆம் திகதி, ஈஸ்டர் தாக்குதலைத் தடுப்பதில் அலட்சியமாக இருந்ததாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க மீது ஜனாதிபதி ஆணைக்குழு மீண்டும் குற்றஞ்சாட்டியது.

சிவில் அதிகாரிகள் உட்பட மூவரடங்கிய குழு விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் தாமர டி பெரேரா தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையின்படி, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க விடுதலை செய்யப்பட்டுள்ளார். இவர் தற்போது மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக கடமையாற்றி வருகின்றார்.

விசாரணைகள் நிறைவடைந்தவுடன் குற்றச்சாட்டுகள் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட மற்ற அதிகாரிகள் பற்றிய அறிக்கையை குழு சமர்ப்பிக்கும் என்று அவர் கூறினார்.