அரசியலமைப்பு பேரவைக்கு சித்தார்த்தன் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்

அரசியலமைப்பு பேரவைக்கு சித்தார்த்தன் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்
Spread the love

அரசியலமைப்பு பேரவைக்கு சித்தார்த்தன் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அரசியலமைப்பு பேரவைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி. சித்தார்த்தன் பரிந்துரைக்கப்பட்டு அவரை நானும் நீங்களும் ஏற்றுக் கொண்டுள்ளபோதும்

அவர் ஏன் இதுவரை நியமிக்கப்படவில்லை என்பது உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் தெரியவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23),அரசியலமைப்பு பேரவை தொடர்பில் ஏற்பட்ட வாதப்பிரதிவாதங்களின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

அரசியலமைப்பு பேரவை தொடர்பில் ஏற்பட்ட வாதப்பிரதிவாதங்களின் போது எழுந்த ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.யான ஹர்ஷ டி சில்வா,அரசியலமைப்பு பேரவைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.யான தர்மலிங்கம்

சித்தார்த்தனின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவரை அந்த பதவிக்கு சபாநாயகர் நியமிக்காமல் இருக்கிறார் என்றார்.

இதற்கு ஜனாதிபதி பதிலளிக்கையில், , அது சபாநாயகரின் தவறு அல்ல. எதிர்க்கட்சியில் இருந்து சில குழுக்கள் வேறு பெயர்களை பரிந்துரைத்திருக்கின்றன .

அதனால் அதனை அவர்கள் தீர்த்துக்கொள்ள வேண்டும். அந்த குழுக்கள் உங்களுடன்தான் இணைந்து செயற்படுகின்றன.

அதனால் இது அரசாங்கத்தின் பிரச்சினை அல்ல. எதிர்க்கட்சியே இதனை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.

மீண்டும் எழுந்த ஹர்ஷ டி சில்வா எம்.பி., தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்க்கட்சியில் இருக்கும் பிரதான ஒரு கட்சி.

அரசியலமைப்பு பேரவைக்கு சித்தார்த்தன் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்

அவர்கள்தான் சித்தார்த்தன் எம்.பியை பரிந்துரை செய்திருக்கிறார்கள். அப்படியாயின் ஏன் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கேட்டார்.

இதற்கு ஜனாதிபதி பதிலளிக்கையில் இது தொடர்பில் எனக்கு பதில் வழங்க முடியாது. எதிர்க்கட்சியில் இருக்கும் வேறு சில குழுக்களே அவர்களில் ஒருவரின் பெயரை பரிந்துரைத்திருக்கின்றன என்றார்.

அந்த குழு யார் என சொல்லுங்கள் என ஹர்ஷ டி சில்வா எம்.பி கேட்டார்.

எனக்கு அது தெரியாது. சபாநாயகரிடமே கேட்கவேண்டும். இது எதிர்க்கட்சிகளின் பிரச்சினை.

நான் யாருடைய பெயரையும் பரிந்துரைக்கவில்லை என்று ஜனதிபதி கூறினார்.

அதற்கு ஹர்ஷ எம்.பி. எதிர்க்கட்சியில் இருந்து சித்தார்த்தனின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. அதனை நியமித்தால் பிரச்சினை முடிந்துவிடும்.


அதனை சபாநாயகரே செய்ய வேண்டும்.. அதனால் இது எதிர்க்கட்சியின் பிரச்சினை என தெரிவிக்க வேண்டாம் என்றார்.