அஞ்சா எழுவாய் அகிலம் தொடுவாய்

Spread the love

அஞ்சா எழுவாய் அகிலம் தொடுவாய்

வருகின்ற தடை கண்டு வாடாதே
வரும் வலி என்ன இடர் என்று கேளாதே ..
எதிர் என்ன வரிகினும் எழுந்தாடு
எதிர் புயல் என நின்றே பந்தாடு ..

உடையது இல்லா பழங்காலம்
உடையது தரித்தது இக் காலம் …
சிந்தனை தட்டி எழுந்தானே – இன்று
சீறும் வானம் தந்தானே ….

ஆறாம் அறிவை நீ தட்டு
ஆடலாம் ஆகாயம் நீ தொட்டு ..
நம்பிக்கை மனதில நீ நட்டு
நாள் எல்லாம் போடடாநடை நட்டு …

தோல்வி ஒவ்வொன்றும் படி நிலை தான்
தேறும் வெற்றியின் முதல் அடி தான் …
தளர நின்று நடை போடு
தரணியே உந்தன் காலடி தான் ….

அஞ்சி ஒடுங்குதல் அவமானம்
அவை கெஞ்சி வீழ்தல் இழி கேடு …
உன்னிலை இழக்கா நீ நடந்தால்
உலகில் நீயே முதல் புனிதன் …!

  • வன்னி மைந்தன் -(ஜெகன் _
    ஆக்கம் -09-03-2018
  • வன்னி மைந்தன் கவிதைகள்

    Leave a Reply