பாண் சாண்ட்விச் |பிரட் சாண்ட்விச் செய்வது எப்படி |Bread Sandwich Recipe| Bread Sandwich

பாண் சாண்ட்விச் |பிரட் சாண்ட்விச் செய்வது எப்படி |Bread Sandwich Recipe| Bread Sandwich
Spread the love

பாண் சாண்ட்விச் |பிரட் சாண்ட்விச் செய்வது எப்படி |Bread Sandwich Recipe| Bread Sandwich

பாண் சாண்ட்விச் ,இலகுவான முறையில் பிரட் சாண்ட்விச் சுவை போல செய்வது எப்படி என்ற கவலை விடுங்க மக்களே .

பேக்கரி சுவையில் பாண் சாண்ட்விச் இப்படி செய்து நாள் தோறும் சுவையுங்க மக்களே ,மிக இலகுவான செய்முறை ,வாங்க செய்முறைக்குள் போகலாம் .

பாண் சாண்ட்விச் செய்வது எப்படி .? அதற்கு தேவையான பொருட்கள் என்ன .வாங்க இதில பார்க்கலாம்

முதல்ல பிரட் சாண்ட்விச் செய்திட அடுப்பில சட்டியை வைச்சு அதில எண்ணெய் ஊற்றிடி சூடாக்கி கொள்ளுங்க .

எண்ணெய் சூடானதும் கடுகு ,சிறும் சீரகம் ,இரண்டு பச்சமிளகாய் இரண்டு பொடியாக்கி வெட்டிய வெங்காயம் ,சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளுங்க .

அரை கரண்டி இஞ்சி பூண்டு விழுது ,பாதி குடமிளகாய் நன்றாக பொடியா வெட்டி சேர்த்திடுங்க ,கூடவே கோவா மெல்லியதாக வெட்டி சேர்த்திடுங்க கூடவே தக்காளி பழம் பொடியாக வெட்டி சேர்த்திடுங்க ,

இப்போ நன்றாக எல்லாத்தையும் சேர்த்து வதக்கிடுங்க ,நன்றாக வதங்கியதும் ,மஞ்சள் தூள் ,கரம் மசாலா ,சீராக தூள் ,காரத்திற்கு வெறும் மிளகாய் தூள் ,தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கிடுங்க .

இப்போ இது கூட எலுமிச்சை சாறு விட்டு கலக்கிடுங்க ,இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து கலந்திட்டு அடுப்பை அனைத்திடுங்க .இப்போ பாண் சாண்ட் வீச்சுக்கு தேவையான மசாலா ரெடியாகிடிச்சு .

{பாண்}பிரட் சாண்ட்விச் செய்முறை இரண்டு

இப்போ அடுப்பில் தோசை கல்லை வைத்து ,எண்ணெய் தடவி சூடாக்கி கொள்ளுங்க ,சூடான எண்ணெய் மேல பாணை போட்டு இரு பக்கமும் நன்றாக வேகி வரும் பதத்திற்கு சூடாக்கி எடுத்திடுங்க .

இப்போ அதன் மேல மசாலாவை சேர்த்து வைத்து சாப்பிட்டு கொள்ளுங்க .

அவ்வளவு தாங்க {பாண்}பிரட் சாண்ட்விச் ரெடியாடிச்சு ,இதுபோல நன்றாக சுவைத்து இனி சாப்பிட்டு கொள்ளுங்க மக்களே .