
இறந்து போ
சாக்கடையை தூவி அன்று
சாதனைகள் படித்தவர்
பூக் கடைகள் ஏதுமினிறி
புழுங்கி ஏன் அழுகிறார்
வேர்க் கடலை இதுவென்று
வெற்றிகளாய் உரைத்தவர்
வேர் அறுந்து வீழ்ந்ததென்ன
வேடிக்கையார் கேட்கிறார்
கை கூப்பி கும்பிட்டு
கால் வீழ்ந்து அழுதாரை
மேல் உதைத்து வீழ்த்தி
மேனியை சுட்டீரே
துப்பாக்கி இருக்கென்று
துணிவுடனே சுட்டவரே
தப்பாகி போனீரே
தரணி சொல்கிறதே
இறந்து போ
பெரும் பான்மை நீர் என்று
பெருமையாய் சொன்னவரே
பெரும் பான்மை துரத்தையிலே
பொடியாகி பறந்ததென்ன
கோட்டையில இருப்பதாய்
கொக்கரித்த கோட்டாவே
நாட்டை விட்டு போனதென்ன
நாடோடி ஆனதென்ன
பார்த்தாயா தமிழரது
பழி உன்னை துரத்திறது
கேட்டாயா நீ அன்று
கேடு கெட்டாயே
பூக்குமா இனி உந்தன்
பூந்தோப்பு அங்கு
பார்க்குமா இனி உன்னை
பலம் கொண்ட அன்பு
வேற்கிறதா இன்று
வேதனை தெரிகிறதா
காத்தவரே உன்னை
கை விட்ட கேவலமா
இருந்தென்ன இனி காண்பாய்
இன்றேனும் இறப்பாய்
இன்றேனும் உந்தன்
பிடிவாதம் துறப்பாய் .
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 29-08-2022