42 248 பேரை கைது செய்யுமாறு பணிப்புரை

யுக்திய நடவடிக்கையில் மேலும் பலர் கைது
Spread the love

42 248 பேரை கைது செய்யுமாறு பணிப்புரை

பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 42,248 பேரின் பெயர் பட்டியல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி யுக்திய நடவடிக்கையின் கீழ் அவர்களை கைது செய்யுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.

அந்த சந்தேக நபர்களில், 35,505 பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களும் , இதுவரை கைது செய்யப்படாத 4,258 சந்தேக நபர்களும், குற்றங்களுக்காக தேடப்படும் 807 (2022 இல்) மற்றும் 1,678 (2023 இல்) சந்தேக நபர்களாக 2,485 பேர் அடங்கியுள்ளனர்.

42 248 பேரை கைது செய்யுமாறு பணிப்புரை

நாளை (14) முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களும் யுக்திய நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட வேண்டுமென பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று பணிப்புரை விடுத்துள்ளார்.

மேற்கண்ட 3 பட்டியலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை அடுத்த ஒரு மாத காலத்திற்குள் தமது காவல்துறையை உள்ளடக்கிய நடவடிக்கைகளை

மேற்கொண்டு சட்டத்தின் முன் நிறுத்த அனைத்து குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளையும் 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் பதில் பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.