யாழில் லொறியை உடைத்து பொருட்கள் கொள்ளை

Spread the love

யாழில் லொறியை உடைத்து பொருட்கள் கொள்ளை

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் களஞ்சிய சாலையில் நிறுத்தி வைக்க பட்டிருந்த லொறியை உடைத்து பொருட்கள் கொள்ளையடித்து செல்ல பட்டுள்ளது

டீசல் இல்லாத காரணத்தினால் லொறியில் ஏற்ற பட்ட பொருட்கள் எடுத்து செல்ல முடியதாத நிலையில் தரித்து நின்றது

அவ்வாறான லொறியை உடைத்து அதற்குள் ஏற்ற பட்டிருந்த பதினொரு லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் திருடர்களினால் கொள்ளையடிக்க பட்டுள்ளது

திருடிய பொருட்கள் விற்பனை செய்த பொழுது 22, வயதுடைய திருடர்கள் சிக்கினர்
அப்பொழுது கோண்டாவில் பகுதியில் லொறியை உடைத்து திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது

மேலும் இதே லொறியை உடைத்து கொள்ளை யில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார் ,மறு திருடன் தப்பி ஓடிய வண்ணம் உள்ளார்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருட்களின் விலை வாசி உயர்வை அடுத்து கொள்ளை சம்பவங்களில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்

இவ்விதமான கொள்ளை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் செல்கிறது

வேலை வாய்ப்பு இன்மை ,அதனால் பண தட்டுப்பாடு ,பொருட்கள் இல்லா கொடுமை காரணமாக இந்த கொள்ளை சம்பவங்கள் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது

உணவு பொருட்கள் விலைவாசி உயர்வும் ,அதன் தட்டுப் பாடும் இலங்கையை ஆக்கிரமித்துள்ள நிலையில் எதிர் வரும் மூன்று மாதங்களில் இலங்கையில் உணவு பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற ஆபாய அறிவிப்பு வெளியாகியுள்ளது

யாழில் லொறியை உடைத்து பொருட்கள் கொள்ளை

இதனால் மக்கள் உணவு பொருட்கள் கொள்வனவு செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர் ,
இலங்கை திரு நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி லொறியை உடைத்து பொருட்கள் திருடும் நிலைக்கு மக்களை இட்டு சென்றுள்ளது

நாட்டை கொள்ளையடித்து ஏப்பம் இட்ட ராஜபக்சே ஆட்சியாளர்களினால் அப்பாவி மக்கள் உணவு பொருட்கள் இன்றி வாடும் நிலையும் ,பொருட்கள் விலை உயர்வால் அவஸ்தை படும் நிலையும் ஏற்பட்டுள்ளது

யாழில் அதிகரித்து செல்லும் வழிப்பறி கொள்ளைகள் ,கத்திகளுடன் மக்களை மிரட்டி கொள்ளை அடிக்கும் கொள்ளையர் அட்டகாசம் மக்களை விரட்ட நடை பிணமாக உலாவும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது

பல லட்சம் ரூபாய் பெறுமதியான இலத்திரனியல் பொருட்கள் ஏற்றிய படி நின்ற லொறி கொள்ளை வர்த்தகர்கள் மத்தியில் சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது

சட்டம் ஒழுங்கு கெட்டு விட்ட நாட்டில் இடம்பெறும் கொள்ளை சம்பவங்கள் நிறுத்த பட்டு மக்கள் உயிர்கள் கொள்ளையர்களிடம் இருந்து என்று காப்பாற்ற படும்

ஒரு வேளை உணவிற்காக மக்களை மக்கள் பொருட்கள் பெற்று கொள்ள கொல்கின்ற அபாயம் தற்போது இலங்கையில் எழுந்துள்ளது .

  • வன்னி மைந்தன் –

    Leave a Reply