முரசு மண்ணே பதில் கூறாய்

Spread the love

முரசு மண்ணே பதில் கூறாய்

குறிஞ்சி ,மருதம் குடி கொண்ட மண்ணில்
கூடு கட்டிய ஊரே – நாளை
கூடுறாய் ஆண்டில் இரண்டு – நீ
கூவுவாய் என்ன கூறு …?

தேறுவாய் என்றே தேடியே வந்தார்
தேற்றம் காணவில்லை ….
அகவை இரண்டு கழிய இங்கு
அழைக்கிறாய் என்ன விந்தை …?

சோரம் போனவர் பேரமானவர்
சோடனையாய் தினம் கூட …
வளரும் சங்கம் வளமது இழக்கும்
வழிகளை தடுக்க முடியல …

சிந்தையில்லா ஐந்தறிவாகி -சங்கம்
சிறையில் அடைக்கிற கோரம் ….
கண்டு கொதித்து கணையாய் எழுதல்
காலத்தில் இங்கு பிழையாம் …

முரசு மண்ணே பதில் கூறாய்

திண்டு கழித்து திண்ணைகள் கூடி
திமிராய் பேசும் நிலையாம் …..
தொண்டு செய்தல் சங்க நிலையின்
தொழும் பணி நிகழ்வின் முனையாம் …

பயின்று எழுந்து பணியது புரியும்
பள்ளி இங்கு இல்லையா …?
பாதை நீளும் வானை முட்டும் – திறன்
பக்குவ வாத்தி இல்லையா…?

கொள்கை விற்று கொள்ளையடிக்கும்
கொள்ளையர் கூட்டம் யாரோ ..?- மனம்
கொதிக்கும் நிலையில் எமை எழவைத்த
கொடிய செயலின் வேர் நீரே ….

தடுக்க மறந்து வினை தலையது ஆட்டும்
தறுதலை இல்லை நாமே ….
செழிக்க சங்கம் மறுத்தால் இங்கே
செழு நிலை இழப்பீர் நீரே …

  • வன்னிமைந்தன் -(ஜெகன் )
    ஆக்கம் -31/01/2018
    லண்டனில் முரசு மோட்டை ஒன்றிய கூடல்
    எதிர் வரும் மாசி 10/02/2018 கூடுவதை அறிந்த போது
    மனதில் எழுந்த கொதிப்பின் பதிவு …!
  • வன்னி மைந்தன் கவிதைகள்

    Leave a Reply