மல்லாவியில் 12800000 செலவில் கனடா – இரத்த சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

மல்லாவியில் 12800000 செலவில் கனடா - இரத்த சுத்திகரிப்பு நிலையம் திறப்பு
Spread the love

மல்லாவியில் 12800000 செலவில் கனடா – இரத்த சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

மல்லாவியில் ரூபாய் 12800000 செலவில் கனடா – மல்லாவி இரத்த சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டது.


மல்லாவி மற்றும் சுற்றுவட்டாரத்தில் 500 இற்கும் மேற்பட்ட சிறுநீரக நோயாளிகள் இருப்பதனால் அவர்களுக்கென்ற ஒரு இரத்த சுத்திகரிப்பு நிலையம் இல்லாமல் பெரும் அவதிக்குள்ளாகி வந்துள்ளனர்.

சில நோயாளிகள் ஒன்ற விட்ட ஒரு நாள் இரத்த சுத்தகரிப்பிற்காக சில நேரங்களில் நான்கு மணித்தியாலங்கள் பயணம் செய்து மிகவும் அல்லலுறுவதாக கேள்விப்பட்டே, இதனை நாங்கள் மல்லாவி வைத்தியசாலைக்குள் நிறுவி உள்ளோம்.

இந்த நிலைய திறப்பிற்கு பாரளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்கள் கலந்து கொண்டு திறந்து வைத்தார் .


ஒரு இரத்த சுத்திகரிப்பு இயந்திரத்தினை, மக்களுக்கான சேவையினை கனடாவில் இருந்து கொண்டு தாயகத்தில் தன் இறுதி மூச்சு வரை செய்திட்ட பரஞ்சோதி சோதிமலர் (பரஞ்சோதி டீச்சர்) அவர்களின் ஞாபகார்த்தமாக அன்பளிப்பு செய்துள்ளோம்.

மற்ற இயந்திரத்தினை எங்கள் நிவாரண அமைப்பிற்கு பல ஆண்டு காலமாக பெரும் தூணாக இருந்து ஆண்டுதோறும் 15000 டொலருக்கு மேல் தானம் வழங்கும் திரு பிரான்சிஸ் அந்தோனிப்பிள்ளை அவர்களின் தாயாரான திருமதி பெர்னதேத்தம்மாவின் ஞாபகார்த்தமாக அன்பளிப்பு செய்துள்ளோம்.


நலிந்த மக்கள் இனி பயண செலவுகள் இன்றி இங்கு இந்த சேவையினை பெற்றிடலாம்.

மல்லாவியில் 12800000 செலவில் கனடா -  இரத்த சுத்திகரிப்பு நிலையம் திறப்பு
மல்லாவியில் 12800000 செலவில் கனடா -  இரத்த சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

மென்மேலும் தேவையுள்ள பல மருத்துவ உதவிகளை தொடர்ந்து மக்களுக்கு வழங்க உள்ளோம்! நன்றி!

  • செந்தில் குமரன்
    நிவாரணம் அமைப்பு
https://www.youtube.com/user/ethiricom1/videos