எரிபொருள் விலைகளைக் குறைத்த அரசு

எரிபொருள் விலைகளைக் குறைத்தது
Spread the love

எரிபொருள் விலைகளைக் குறைத்த அரசு

எரிபொருள் விலைகளைக் குறைத்த அரசு ,இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலைத்

திருத்தத்துடன் இணைந்து, சினோபெக் எனர்ஜி லங்கா இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் தனது விலை திருத்தத்தை அறிவித்துள்ளது.

இதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய சில்லறை விலை ரூ. 365 ஆகும். 95 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீற்றர் 20 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய சில்லறை விலை ரூ. 420 ஆகவுள்ளது.

ஒரு லிட்டர் ஒட்டோ டீசல் ரூ. 27 இனால் குறைக்கப்பட்டுள்ளதுடன், தற்போதைய விலை ரூ. 333 ஆகும். இதேவேளை, சுப்பர் டீசல் ஒரு லீற்றர் 9 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய சில்லறை விலை ரூ. 377 ஆகவுள்ளது.

தேர்தல் நிகழ்த்த படவுள்ளதை அடுத்து தற்போது ,ஆளும் அரசு பொருட்களின் விலைகள் முதல் யாவும் குறைப்பு செய்து வருகிறது குறிப்பிட தக்கது .