மருத்துவர்,தாதியரை , கட்டாய விடுமுறையில் அனுப்பும் யாழ் மருத்துவமனை

Spread the love

மருத்துவர்,தாதியரை , கட்டாய விடுமுறையில் அனுப்பும் யாழ் மருத்துவமனை

தமிழர் தாயகமாக விளங்கும் வடக்கு பகுதியில் அமைந்துள்ள அரச மருத்துவ மனைகளில் பணி புரியும் தாதிமார் ,மற்றும்

மருத்துவர்களை அதன் பணிப்பாளர் நாயகம் கட்டாய விடுமுறையில் வீட்டுக்கு அனுப்பும் நிகழ்வுகள் நடந்த வண்ணம் உள்ளது

மாதத்தில் பதின் ஐந்து நாட்கள் பணிபுரிந்தால் ,ஏனைய நாட்கள் பணிபுரிய தேவை இல்லை என்ற வகையில் இந்த நகர்வு நகர்த்த படுகிறது ,

இதனால் மேலதிக நோயாளர் பராமரிப்பு வேலையை புரிந்தவர்கள் வேலைக்கும் ஆப்பு அடிக்க பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்க

படுகின்றனர் ,ஊரடங்கு வேளையை பயன் படுத்தி மக்கள் மருத்துவ மனைகளுக்கு வந்திட மாட்டார்கள் என்ற நிலையை மேற்கோள் காட்டி தாதிமார்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்க படுகின்றனர்

ஓசை படாமல் உள்ளகத்தே நடக்கும் இந்த விளையாட்டு சுகாதார அமைச்சர் ,கோட்டாவின் நேரடி கட்டு பாட்டில் ,அரச பணத்தை மீத

படுத்தி கொடுக்கும் நடவடிக்கையின் முன் மாதிரி செயலாக இது பார்க்க படுகிறது

நோயாளர்கள் உரிய முறையில் கவனிக்க படாமல் உள்ளதும் அம்பல மாகியுள்ளது ,எனினும் இதனை மருத்துவர் சத்திய மூர்த்தி

போன்றவர்கள் மறைத்து வருவதாகவும் குற்ற சாட்டுக்கள் முன் வைக்க படுகின்றன .

உதாரணமாக இன்று வேலை செய்தால் நாளை கட்டாய விடுப்பு வழங்க படுகிறது ,அதற்கு அளிக்க படும் விளக்கம் இந்த நோயில்

இருந்து தாதிமார்களை ,மருத்துவர்களை காப்பாற்றி கொள்ளும் நடவடிக்கையாம் .

நேரடி பார்வைக்கு இது சரியான ஒன்றாக இருக்கும் ,ஆனால் உள்ளகத்தே பணத்தை மீத படுத்தி அரசை காப்பாற்றும் தந்திர நகர்வு என பாதிக்க பட்டவர்கள் கருத்துரைக்கின்றனர்

கொரனோ நோயை முதன்மை படுத்தி ,இந்த ஓசை படாத கழுத்தறுப்பு நிகழ்வு இடம்பெற்று வருகிறது ,இதனை ஊடங்கள்

வெளியிடாத வண்ணம் வாய்ப்பூட்டு போட பட்டுள்ளமை இங்கே சுட்டி காட்ட தக்கது

யாழ்ப்பாண,மருத்துவமனை,Jeffna hospital,
யாழ்ப்பாண,மருத்துவமனை,Jeffna hospital,

Leave a Reply