மத்திய கீழக்கிற்கு 3000 இராணுவத்தை அனுப்பி வைத்த அமெரிக்கா

Spread the love

அமெரிக்கா -மத்திய கீழக்கிற்கு 3000 இராணுவத்தை அனுப்பி வைத்த அமெரிக்கா

ஈராக்கில்- ஈரான் மற்றும் ஈரானிய இராணுவ தளபதிகளை அமெரிக்கா போட்டு தள்ளியதன் பின்னர் ஏற்பட்டுள்ள பதட்டத்தை அடுத்து மத்திய கிழக்கிற்கு

அமெரிக்கா மூவாயிரம் விசேட இராணுவ அணிகளை அனுப்பி வைத்துள்ளது .

அமெரிக்கா இலக்குகள் மீது ஈரான் கூட்டு படைகள் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சத்தில்
இந்த படைகள் விசேடமாக அனுப்ப பட்டுள்ளன .

தாம் ஈரானிய இராணுவ தளபதி படுகொலையின் பின்னர் எதையும் சந்திக்க தயார் என சண்டியர் அமெரிக்கா ஜனாதிபதி டிரம் அறிவித்துள்ளார் .

உங்கள் ஆளை போட்டு விட்டோம் உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்து பாருங்கள் என்ற திமிரில் அவர் பேச்சு உள்ளது ,எமக்கு எதிராக செயல் பட யார் முனைந்தாலும் இது தான் அவர்களுக்கு நடக்கும் .

போரில் ஈரானால் எம்மை வெல்ல முடியாது ,நாம் வெல்வோம் என்ற பாணியில் டிரம் பேச்சு அமைந்துள்ளது

ஈரான் மேற்கொள்ள போகும் அடுத்த கட்ட நடவடிக்கையை அடுத்தே எமது நகர்வுகள் இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுளளார் .

அதாவது டிரம் சொல்ல வருவது ஈரானின் காலில் பந்துள்ளது .போரா..? சமதானமா என்பதை அவர்களே முடிவெடுக்கட்டும் .

நாம் பயங்கரவாதியை கொன்றோம் .
எமது நாட்டையும் மக்களையும் காப்பற்றியுள்ளோம் .

இரு நாட்டினது இரண்டு தளபதியை கொன்று விட்டு அமெரிக்காவின் இந்த திமிர் பேச்சு இவ்வாறு அமைந்துள்ளது மத்திய கிழக்கில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்ந்து இராணுவ ,மற்றும் ஜிகாத் மூலம் ஈரான் ஈராக் இணைந்து பழிவாங்கும் தாக்குதலை நடத்தலாம் என எதிர் பார்க்க பாடுகிறது .

இரண்டு இராணுவ தளபதிகள் நல்லடக்கத்தின் பொழுது தாக்குதல் வெடிக்கலாம் எனவே எதிர்பார்க்க படுகிறது

மத்திய கீழக்கிற்கு அனுப்ப படும் மேலதிக படையினரால் நாம் உங்களை வேட்டையாட வருகிறோம் ,எம்மிடம் ஏவுகணைகள் உள்ளன .

திறமையான இராணுவம் ,உளவுத்துறை உள்ளது ,என டிரம்ப் குறிப்பிட்டு பேசியுள்ளார் .

எமக்கு எதிராக இறந்த இராணுவ தளபதி போரை ஆரம்பிக்க இருந்தார் ,அது இப்பொழுது தடுத்து நிறுத்த பட்டு விட்டது என்கிறார் அமெரிக்கா ஜனாதிபதி .

– வன்னி மைந்தன் –

Leave a Reply