பாடசாலைகளை மீண்டும் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பம் – கல்வி அமைச்சு

Spread the love

பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாவதை ஒருவாரத்திற்கு ஒத்தி வைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதற்கமைவாக பாடசாலைகளை மீண்டும் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

இருப்பினும் எதிர்வரும் 27 ஆம் திகதி தரம் 11, 12 மற்றும் 13 ஆம் வகுப்பு மாணவர்களுக்கே கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஏனைய அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இராஜாங்கனை மற்றும் வெலிகந்த ஆகிய கல்வி வலையங்களுக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் ஆகஸ்ட் 10 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க வழங்கிய பரிந்துரைகளுக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டின் ஐந்து (05) மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 200 பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களிள் PCR முடிவுகள் அடுத்த

சில நாட்களில் வெளிவரவுள்ளது , மூன்று மாணவர்களுக்கு மாத்திரமே தொற்று ஏற்பட்டுள்ளது என்பதையம் கருத்திற்கொண்டு, பாடசாலை கல்வி நடவடிக்கைகளை

முன்னெடுப்பது எனும் முடிவின் அடிப்படையில், பாடசாலை மாணவர்களை மேலும் ஒரு வாரத்திற்கு சமூகத்திலிருந்து

தனிமைப்படுத்துவது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய எடுக்கக்கூடிய மிகவும் அர்த்தமுள்ள நடவடிக்கை என்று கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.

அதற்கமைய, பாடசாலைகள் எதிர்வரும் ஜூலை 27 இல் ஆரம்பிப்பது மிகவும் பொருத்தமான திகதியாக இருக்கும் என கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.

குறித்த வாரத்தில் தரம் 11, 12 , 13 ஆகிய மாணவர்கள் மட்டுமே பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும்.


ஏனைய தரங்களில் உள்ள மாணவர்களுக்கு தேர்தலுக்குப் பின்னர் வருகின்ற முதலாவது திங்கட்கிழமையான ஓகஸ்ட் 10 ஆம் திகதி

கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க சிறந்த தினமாக இருக்கும் என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பரிந்துரைத்துள்ளார்.

இருந்த போதிலும், ஓகஸ்ட் 10 ஆம் திகதிக்கு முன்னர் இராஜங்கனை மற்றும் வெலிக்கந்த கல்வி பிரிவுகளில் எந்த பாடசாலைகளையும்

திறக்க வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட மாகாண அதிகாரிகளுக்கு கல்வி அமைச்சினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கல்வி

அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

      Leave a Reply