பதுளை டிப்போ பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

பதுளை டிப்போ பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்
Spread the love

பதுளை டிப்போ பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

இலங்கை போக்குவரத்து சபையின் பதுளை டிப்போ பஸ் ஊழியர்களுக்கும் பதுளை மாகாணங்களுக்கு இடையிலான பயணிகள் போக்குவரத்து சங்கத்துக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக பதுளை டிப்போ பஸ் ஊழியர்கள் சேவையில் இருந்து விலகியுள்ளனர்.

நேற்று (02) பிற்பகல் முதல் அந்த டிப்போவில் இருந்து பஸ் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

பதுளை – கொழும்பு வீதி இலக்கம் 99இன் ஒன்றிணைந்த சேவையானது, இந்த பேரூந்துகளினால் உரிய முறையில் இடம்பெறுவது இல்லை என தெரிவிக்கும் போக்குவரத்து சபை ஊழியர்கள், இந்த நிறுவனத்திற்கு சொந்தமான பஸ்களை மத்திய பஸ் நிலையத்தில் நிறுத்துவதற்கு எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

பதுளை டிப்போ பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

அந்த பஸ்கள் தனியார் பஸ் தரிப்பு நிலையத்தில் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆனால் நீதிமன்ற உத்தரவுக்கு அமையவே தமது பஸ்கள் இயங்குவதாக பதுளை பயணிகள் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், அனைத்து தனியார் பேருந்து சேவைகளும் இடையூறு இன்றி இயங்குவதாகவும், பதுளை மாவட்டத்தில் உள்ள ஏனைய டிப்போக்களின் பேருந்துகள் வழமை போன்று இயங்குவதாகவும் அத தெரண செய்தியாளர் மேலும் குறிப்பிட்டார்.

video