நிதி மோசடி செய்தவர்கள் தொடர்பில் மேலும் பல தகவல்கள்

நிதி மோசடி செய்தவர்கள் தொடர்பில் மேலும் பல தகவல்கள்
Spread the love

நிதி மோசடி செய்தவர்கள் தொடர்பில் மேலும் பல தகவல்கள்

கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் பிரமிட் நிதி நிறுவனமொன்றை நடத்தி 500 கோடி ரூபாவிற்கு மேல் மோசடி செய்த சந்தேகநபர்கள் தொடர்பில் மேலும் பல உண்மைகளை பொலிஸார் அம்பலப்படுத்தியுள்ளனர்.

2021ஆம் ஆண்டு, குறித்த சந்தேகநபருக்கு, தென் மாகாணத்தில் உள்ள பிரதான விகாரை ஒன்றின் விகாராதிபதியுடன் இருந்த தனிப்பிட்ட தொடர்பால் பஸ்நாயக்க நிலமே பதவி வழங்கப்பட்டமை தெரியவந்துள்ளதாக, சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.

நிதி மோசடி செய்தவர்கள் தொடர்பில் மேலும் பல தகவல்கள்

2021 ஆம் ஆண்டு, நாரஹேன்பிட்டியில் காணி உறுதிப் பத்திரம் தொடர்பான சர்ச்சையைத் தீர்ப்பதற்காக குறித்த சந்தேக நபர், அந்த விகாராதிபதிக்கு160 இலட்சம் ரூபாவை கொடுத்துள்ளார்.

பலம் வாய்ந்த அரசியல்வாதி ஒருவருடன் தொடர்புள்ள அந்த விகாராதிபதி குறித்த காணியை விற்பனை செய்வதாக சந்தேகநபரிடம் கூறி, அவருக்கு 80 இலட்சம் ரூபா மாத்திரமே வழங்கியுள்ளார்.

எஞ்சிய பணத்தினை தீர்க்கும் வகையில் விகாரையின் பஸ்நாயக்க நிலமே பதவியை குறித்த விகாராதிபதி சந்தேகநபருக்கு வழங்க நடவடிக்கை எடுத்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.