நான்கு மாநில தேர்தல் முடிவுகள் பாஜக காங்கிரஸ் இடையே கடும் போட்டி

நான்கு மாநில தேர்தல் முடிவுகள் பாஜக காங்கிரஸ் இடையே கடும் போட்டி
Spread the love

நான்கு மாநில தேர்தல் முடிவுகள் பாஜக காங்கிரஸ் இடையே கடும் போட்டி

இந்தியாவில் தெலங்கானா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு ஆரம்பமாகியுள்ள நிலையில், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களின் வாக்கு எண்ணிக்கையில் பாஜக முன்னிலையில் உள்ளது.

இதே போன்று தெலுங்கானா, சத்தீஸ்கர் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.

தெலங்கானா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் மாநில சட்டசபைகளுக்கு நவம்பர் 7ஆம் திகதி முதல் நவம்பர் 30 ஆம் திகதி வரை பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

நான்கு மாநில தேர்தல் முடிவுகள் பாஜக காங்கிரஸ் இடையே கடும் போட்டி

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. மிசோரம் மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை (டிசம்பர் 4) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் காலை 10 மணி நிலவரப்படி, மத்திய பிரதேசத்தில் உள்ள 230 தொகுதிகளில் பாஜக 131 தொகுதிகளிலும், காங்கிரஸ் 94 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

ராஜஸ்தானில் உள்ள 199 இடங்களில் பாஜக 105 இடங்களிலும், காங்கிரஸ் 78 தொகுதிகளிலும் பிற கட்சிகள் 7 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.

இதேபோல சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது.

சத்தீஸ்கரில் உள்ள 90 தொகுதிகளில் 50 இடங்களில் காங்கிரஸும், 40 தொகுதிகளில் பாஜகவும் முன்னிலை பெற்றுள்ளது.

தெலங்கானாவில் உள்ள 119 தொகுதிகளில் காங்கிரஸ் 65 தொகுதிகளிலும், 40 இடங்களில் பிஆர்எஸ் கட்சியும், 7 இடங்களில் பாஜகவும் முன்னிலை பெற்றுள்ளது.

வீடியோ