துப்பாக்கிச் சூடு விமானப்படை விசேட விசாரணை

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Spread the love

துப்பாக்கிச் சூடு விமானப்படை விசேட விசாரணை

இன்று (08) அதிகாலை பாதுக்கை, அங்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் விமானப்படை விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

விமானப்படை ரக்பி அணியில் இணைந்திருந்த விமானப்படை கோப்ரல் ஒருவரே உயிரிழந்துள்ளதாக இலங்கை விமானப்படையின் ஊடகப் பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுக்கை – அங்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது, ​​பொலிஸ் வீதித் தடைக்கு அருகில், உத்தரவை மீறி மோட்டார் சைக்கிள் ஒன்று சென்றதுடன் அதனை செலுத்தியவர் பொலிஸாரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் பொலிஸார் பதிலுக்கு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் இலங்கை விமானப்படையின் வீரர் என பின்னர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஹொரணை – தல்கஹவில பிரதேசத்தில் நேற்று (07) துப்பாக்கிச் சூடு நடத்தி இருவரை கொலை செய்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் இவரே என தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.