தப்பி ஓடிய 50 ஆயிரம் இராணுவத்தை மீள அழைக்கும் இலங்கை இராணுவம்

தப்பி ஓடிய 50 ஆயிரம் இராணுவத்தை மீள அழைக்கும் இலங்கை இராணுவம்
Spread the love

தப்பி ஓடிய 50 ஆயிரம் இராணுவத்தை மீள அழைக்கும் இலங்கை இராணுவம்

தமிழீழ விடுதலை புலிகள் போரில் தப்பி ஓடிய 50 ஆயிரம் இலங்கை இராணுவத்தை மீள அழைக்கும் இலங்கை இராணுவ தலைமையகம் .

போரில் தப்பி ஓடிய இலங்கை இராணுவம்

புலிகள் இலங்கை இராணுவத்தினருக்கு இடையில் இடம் பெற்று வந்த உள்நாட்டு யுத்தத்தில், தப்பி ஓடிய ஐம்பது ஆயிரத்திற்கு மேற்பட்ட சிங்கள இராணுவத்தை ,மீள வந்து படையில் சேருமாறு வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது .

சித்தரை மாதம் 20 ஆம் திகதி முதல் வைகாசி மாதம் 20 ஆம் திகதி வரை மீளவும் பொது மன்னிப்பு காலம் வழங்க பட்டுள்ளது .

இதில் படையில் மீள இணையவோ அல்லது விலகி செல்லவோ முடியும் என்கிறது இலங்கை இராணுவ தலைமையகம் .

இந்த கால பகுதியில் மீள இராணுவத்தில் வந்து சேருமாறு இலங்கை இராணுவ தலைமையகம் அழைப்பு விடுத்துள்ளது .

விடுதலை புலிகள் மரபு வழி போர்

தமிழீழ விடுதலை புலிகளுக்கும் இலங்கை இராணுவத்தினருக்கும் இடையில் பாரிய யுத்தம் இடம்பெற்று வந்தன .

இவ்வாறான கால பகுதியில் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பினரால் குறியீட்டு பெயருடன் கொண்ட பல மரபு படை போர் நடத்த பட்டது .

தப்பி ஓடிய 50 ஆயிரம் இராணுவத்தை மீள அழைக்கும் இலங்கை இராணுவம்

அதில் குறிப்பாக ஓயாத அலைகள் ஒன்று முதல் ஓயாத அலைகள் மூன்று கட்டமான போர் இடம்பெற்று இருந்தது .

இந்த வெற்றிகரமான மண்மீட்பு போரில் பல்லாயிரம் இலங்கை இராணுவம் பலியாகியது .

அதேபோல் ஆனையிறவு படைத்தளம் அழிப்பின் பொழுது இலங்கை இராணுவம் தப்பி ஒடியிருந்தது .

அவ்வாறு தப்பி ஓடிய ஐம்பது ஆயிரம் படைகளில் பத்து ஆயிரம் பேர் மட்டும் மீள திரும்பினர் .

இலங்கை இராணுவத்தில் இணைய மறுக்கும் தப்பி ஓடிய படைகள்

இவ்வாறு தப்பி ஓடியவர்கள் தொடர்ந்தும் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர் .அவர்களையே இப்பொழுது இலங்கை இராணுவம் தேடி வருகிறது .

இன்று இலங்கை இராணுவத்தினருக்கு நடந்த இதே நிகழ்வு நாளை இஸ்ரேல் இராணுவத்தினருக்கும் நடக்கும் .அவர்களது படையிலும் பல ஆயிரம் படைகள் பலியாகி இருக்க கூடும் என்பது கணிப்பாகிறது .

தப்பி ஓடியவர்களை மீளவும் இலங்கை இணைக்க அழைப்பதில் இருந்து புதிய போராட்டம் ,இலங்கையில் வெடிக்க போவதற்கான முன் அறிவிப்பாக இதனை உற்று நோக்க முடிகிறது .

தமிழீழ விடுதலை புலிகள் அழிக்க பட்டாலும் அவர்களதுவீரம் செறிந்த தாக்குதல் எவ்வாறு உள்ளது என்பதை, இலங்கை இராணுவம் இவ்விதம் தப்பி ஓடியதில் இருந்து தெரிகிறது .

வாழ்ந்தவர்கள் அழிக்க படலம் ஆனால் வரலாறு அழிக்க படாது என்பதற்கு இவை சான்றாகும் .