சர்வதேச நீதிமன்ற சட்டத்தரணி உள்ளே நுழைய இஸ்ரேல் மறுப்பு

வடக்கு காசாவை நோக்கி இஸ்ரேல் இராணுவம் நகர்வு
Spread the love

சர்வதேச நீதிமன்ற சட்டத்தரணி உள்ளே நுழைய இஸ்ரேல் மறுப்பு

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) தலைமை வழக்கறிஞரான கரீம்
கானை நாட்டிற்குள் நுழைய இஸ்ரேல் அனுமதிக்காது என இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன .

ரஃபா எல்லைப் பகுதியில் இருந்து பேசிய கான், காசா மற்றும் இஸ்ரேலுக்குள் நுழைய,சாத்தியமான குற்றங்களை விசாரிக்க ஆர்வம் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

முற்றுகையிடப்பட்ட காசா பகுதிக்கு நிவாரணப் பொருட்களை வழங்குவதைத் தடுப்பது ஒரு குற்றமாகும் என கான் தெரிவித்து இஸ்ரேல் அடக்குமுறையை விபரித்தார் .

ரஃபா எல்லைப் பகுதியில் இருந்து பேசிய அவர், பொதுமக்களுக்கு அடிப்படை
உணவு மற்றும் மருந்து கிடைப்பதை உறுதி செய்ய இஸ்ரேல் முயற்சிகளை
மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார் .

வீடியோ