கட்டுநாயக்காவில் காவல்துறையால் ஒருவர் சுட்டு கொலை

கட்டுநாயாககாவில் காவல்துறையால் ஒருவர் சுட்டு கொலை
Spread the love

கட்டுநாயக்காவில் காவல்துறையால் ஒருவர் சுட்டு கொலை

இலங்கை கட்டுநாயக்க பகுதியில் வீதியில் பயணித்து கொண்டிருந்த பெண் ஒருவரது தங்க சங்கிலியை அறுத்து செல்ல முயன்ற ,திருடர்கள் காவல்துறையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர் .

இதற்கு பதில் துப்பாக்கி சூட்டு தாக்குதலை காவல்துறையினர் மேற்கொண்டதில், 22 வயது திருடன் சம்பவ இடத்தில பலியானார் .

மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் .

பெண்ணின் சங்கிலி திருட்டை தடுக்க காவல்துறையினர் முயன்ற பொழுதே ,துப்பாக்கி சூட்டு தாக்குதல் மேற்கொள்ள பட்டது என்கிறது காவல்துறை .

இலங்கையில் ஆயுதம் வைத்திருந்தால் அவர்கள் மீது 20 வருட சிறை என கோட்டபாய அரசு சட்டம் பறைசாற்றிய, நிலையிலும் ஆயுத பாவனைகள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது .

Leave a Reply