உணர்வுபூர்வமாக தொடங்கிய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் !

Spread the love

உணர்வுபூர்வமாக தொடங்கிய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் !

‘இனியும் ஒரு முள்ளிவாய்க்காலை நிகழ விடமாட்டோம்’ என்ற தீர்க்கமான மனோநிலையோடு முள்ளிவாய்க்கால்

தமிழினப்படுகொலையின் 11ஆண்டினை நினைவேந்தும், நினைவேந்தல் வார தொடக்க நிகழ்வுகள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவையில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

வழமையான அரசவை அமர்வாக இல்லாமல், ஒவ்வொரு அரசவை உறுப்பினர்களும் தமது உணர்வுகளை கவிதைகளாக,

நினைவுரைகள், கருத்துக்களை பகிரும் அமர்வாக இது இடம்பெற்றிருந்தது.

தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு கிடைக்கின்ற பரிகாரநீதியே, முள்ளிவாய்க்காலில் நாம் இழந்த உயிர்களுக்கான ஆத்மசாந்தியாக அமையும் என தனது முள்ளிவாய்க்கால்

நினைவேந்தல் தொடகவுரையில் தெரிவித்திருந்த அவைத்தலைவர் வைத்திய கலாநிதி சர்வேஸ்வரிதேவி அவர்கள், சுகந்திரமும்

இறைமையும் கொண்ட தமிழீழ அரசே, தமிழர்களுக்கான சரியானதொரு பரிகாரநீதியாக அமையும் என இடித்துரைத்தார்.

தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உரையினை வழங்கிய பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், எமது மன உணர்வுகளையும், எமது இனத்துக்கு ஏற்பட்ட அநீதியையும்

எம்மோடு மட்டும் வைத்துக் கொண்டு வெந்து நோவதாலும் பின்னடைவதாலும் நாம் அடைய வேண்டிய இடத்தை சென்றடைய முடியாது என்பதால், இந்நாளும் இன்றைய அமர்வும் இனிவரும்

வாரமும், என்னென்ன வகையில் எமது கதையை, எமது விடுதலை பற்றிய செய்தியை எமது பிள்ளைகள், எமது உறவினர்கள், எமது அயலர், நாம் வாழும் சமூகம் என்ற அகன்ற மட்டங்களில்

இன்னுமொருமுறை அவர்களுக்கு நினைவுபடுத்த , புதியவர்களுக்கு எடுத்துச் செல்லலாம் என்பதையும் பற்றி சிந்திக்கவும் அதற்கேற்ப செயற்படவும் பயன்படுத்துவோமாக எனத் தெரிவித்திருந்தார்.

பதினொரு ஆண்டுகளின் முன் நாம் வரிந்துகட்டிக் கொண்ட இலக்குகளான எம் இனத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கும் இழப்புக்களுக்குமான முழுமையான பரிகாரநீதி தேடல், எமது

தேசத்தின் நிரந்தர விடுதலைக்குரிய அரசியல் போராட்டத்தினை முழுமூச்சுடன் தொடர்தல், சிதைக்கப்பட்ட எமது தேசத்தையும் எம் மக்களது வாழ்க்கையையும் மீளக்கட்டியெழுப்புதல் என்ற மூன்று

பெரும் பொறுப்புக்களை இந்த அரசவைவின் அதிபெரும் பொறுப்புக்களாக கொண்டவர்கள் என்பதனையும் நாம்

இவ்விடத்தில் மீளுருப்பெற வேண்டும் என்பதனையும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து அரசவை உறுப்பினர்கள் பலர் முள்ளிவாய்க்காலை நினைவேந்தும் வகையில் தமது உள்ளுணர்வுகளை கவிதைகளாக, கருத்துரைகளை சபையில் முன்வைத்தனர்.

தொலைத்தொடர்பு தொழில்நுட்பமுறையில் நடைபெற்ற இந்த சிறப்பு அமர்வில், பல தேசங்களில் இருந்து கலந்து கொண்ட

தாயகம், தேசியம், அரசியல் இறைமை என்ற தமிழர் தேசத்தின் உன்னத இலட்சியத்தின்பால் உணர்வுகளால் அனைவரும் ஒன்றுபட்டு நின்றனர் என்பது இங்கு குறிப்பிடதக்கது.

உணர்வுபூர்வமாக தொடங்கிய
உணர்வுபூர்வமாக தொடங்கிய

Leave a Reply