இலங்கை குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள உலக வங்கி

உலக வங்கி
Spread the love

இலங்கை குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள உலக வங்கி

இலங்கை குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள உலக வங்கிபாதிக்கப்படக்கூடிய குழுக்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட சீர்திருத்தங்கள் உட்பட அனைத்து விஷயங்களும் வெற்றிபெற வெளிப்படையான முறையில் செய்யப்பட வேண்டும் என உலக வங்கியின் துணைத் தலைவர் மார்ட்டின் ரேஸர் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டனில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் சந்திப்புகளுக்கு இடையில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிற்கும் மார்ட்டின் ரேஸருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வணிகங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இலங்கையில் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாகவும், நாட்டை யதார்த்த நிலைக்கு கொண்டு வருவதற்கு உலக வங்கி யோசனைகளையும் நிதியுதவிகளையும் வழங்கும் எனவும் மார்ட்டின் ரேஸர் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவும் பங்கேற்றுள்ளார்.

இதேவேளை, இந்த சந்திப்பின் போது, ​​இலங்கையின் பிரதிநிதிகள் பல நாடுகளின் பிரதிநிதிகளையும், அமைப்புகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.