இலங்கையில் வருகிறது வீட்டு தோட்டம்

Spread the love

இலங்கையில் வருகிறது வீட்டு தோட்டம்

இலங்கையில் தட்டுப்பாடு நிலவும் உணவுப் பொருட்களை உள் நாட்டில் உற்பத்தி செய்வதற்காக வீட்டுத் தோட்டச் செய்கையை மேற்கொள்ளும் ஆயிரக்கணக்கான கிராமங்களை உருவாக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இலங்கை கிராம உத்தியோகத்தர் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக இது நடைமுறைப்படுத்தப் படுமென்று அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

தற்போதைய சந்தர்ப்பத்தில் உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். கிராம உத்தியோகத்தர்கள், விவசாய அதிகாரிகள், பொருளாதார அபிவிருத்தி அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளும் இந்த வேலைத்திட்டத்தில் பங்கேற்க வேண்டும்.

இலங்கையில் விவசாயிகளுக்கு உரம் கிடைப்பதைத் தடுக்கும் வகையில் சிலர் செயற்படுவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர குற்றஞ்சாட்டியுள்ளார்.

பெரும்போக பயிர்ச் செய்கைக்குத் தேவையான உரத்தைக் கொள்வனவு செய்வதற்கு
110 மில்லியன் டொலர்கள் தேவை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்

இந்த விவசாய நிலங்களுக்கு உரிய உரத்தை பெற்று உள் நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் பட்ஷத்தில் தட்சார்பு பொருளாதாரா முறையை கட்டி எழுப்ப முடியும்

அதன் ஊடாக இலங்கை நாட்டில் எழுந்துள்ள உணவு தட்டுப்பாட்டை முற்றாக நீக்கி சிறந்த பொருளாதார வளம் வாய்ந்த நாடக இலங்கை மலர ஏற்பாடு செய்யலாம் என அமைச்சர்கள் நம்பிக்கை வெயியிட்டுள்ளனர்

விவசாய நிலங்கள் உள்ள இலங்கை திரு நாட்டில் அதன் உற்பத்தியை அதிகரிக்கா வண்ணம் பசளை இறக்குமதியை கோத்தபாஜா ராஜபக்ச நிறுத்தினார்

இதனால் உள்ளூர் உற்பத்திகள் பாதிக்க பட்டன ,மக்கள் விவசாய உறபத்தியில் இருந்து விலகினர் ,அடிப்படை வருமான உயர்வை கோட்டா அரசே தடுத்து நிறுத்தியது

இலங்கையில் வருகிறது வீட்டு தோட்டம்

இந்த கண்மூடித்தமான நகர்வின் ஊடாகவே இலங்கையில் இன்று பலத்த பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதுடன்

நாள் தோறும் பொருட்களின் விலை அதிகரித்து செல்கிறது பால் ,மா,சீனி,எரிபொருள்,எரிவாயு,பால்மா என அனைத்து விலையும் அதிகரிக்க பட்டுள்ளது

நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமாயின் வரி விகிதம் அதிகரிக்க பட வேண்டும் ,தொடர்ந்து வரிகளின் அதிகரிப்பும் ரொக்கட் வேகத்தில் செல்கிறது

ஜனாதிபதி கோத்தபாயா அரசின் கண்மூடித்தனமான செயல் பாட்டின் காரணமாக அடித்தட்டு மக்கள் முதல் செல்வந்தர்கள் வரை பாதிக்க பட்டுள்ளனர் ,

இதனை தடுக்க வேண்டும் எனின் கிராமங்கள் தோறும் வீட்டு தோட்டங்களை அதிகரித்து அதன் ஊடாக பெரும் பொருளாதார விளைச்சலை உருவாக்க முடியும்

இந்த வீட்டு தோட்டம் அதிகரித்தால் அதுவே இலங்கையின் பொருளாதரத்தில் பலத்த எழுச்சி நிலையை உருவாக்கும் என்பதும் ஆளும் இலங்கை அரசின் சிந்தனை கொள்கையாக மாற்றம் பெற்றுள்ளது

இலங்கையில் வருகிறது வீட்டு தோட்டம்

Leave a Reply