சீனா தூதர் பீரிஸ் சந்திப்பு

Spread the love

சீனா தூதர் பீரிஸ் சந்திப்பு

சீனா தூதுவரை இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், இலங்கைக்கான சீனத் தூதருடன் 2022 ஜூன் 02ஆந் திகதி அமைச்சில் வைத்து கலந்துரையாடினார்.

இச் சந்திப்பின் போது, சீனா தூதுவர் ஜென்ஹோங் இலங்கைக்கு வழங்கப்பட்ட உதவிகள் குறித்து விளக்கியதுடன்,

இருதரப்பு ஈடுபாடுகள் மற்றும் நாட்டின் தற்போதைய முன்னேற்றங்கள் தொடர்பான விடயங்கள் குறித்தும் கலந்துரையாடினார்.

குறிப்பாக தற்போதைய சூழ்நிலையின் போது சீனாவின் தாராளமான உதவிகளையும் ஆதரவையும் பாராட்டிய அதே வேளையில், இலங்கையில் பொருளாதார சவால்களைத்

தணிப்பதற்கு தொடர்ந்தும் ஆதரவளிக்குமாறு சீன அரசாங்கத்திடம் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.

இரு தரப்பினரும் பன்முக உறவுகளையும் இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய நட்பையும் பாராட்டினர்

சீனா தூதர் பீரிஸ் சந்திப்பு

இச் சந்திப்பின் போது, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சீனத் தூதரக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு சீனாவே காரணமாக மாற்றம் பெற்றது ,அபிவிருத்தி என்ற போர்வையில் கடனை அள்ளி வழங்கியது ,அந்த கடனை மீள அடைக்கமுடியா நிலையில் இலங்கை திணறியது

மக்களுக்கு வேண்டிய வேலைத்திட்டங்களை செய்து கொடுத்துள்ளதாக இலங்கை ஜனாதிபதிகள் புகழந்து திரிந்தனர்

அபிவிருத்தி என்ற பொறிக்குள் இலங்கையை சிக்க வைத்து அந்தநாட்டின் எழுச்சிமிகு பொருளாதாரத்தை உடைத்து அந்த நாட்டை வறுமைக்குள் சிக்க வைத்த பெருமை சீனாவையே சாரும்

மதம் சார்ந்த நிலையில் சீனாவோடு மகிந்த ராஜபக்ச குடும்பம் ஒட்டி உறவாடியது இன்று ,அதே சீனா நடத்திய பொறிக்குள் சிக்கி சீரழிந்து தமது ஆட்சி அதிகாரத்தை பறி கொடுக்கும் நிலைக்கு சென்றுள்ளது

சீனாவோடு முரண் பட்டு கொண்ட இலங்கைக்கு ,சீனாவின் உதவிகளை போன்று இந்தியா அரசு வழங்கியது ,இந்த இந்தியாவின் திடீர் உதவிகளும் இலங்கை மீதான ஆதிக்கம் செலுத்தும் நகர்வுகளும் சீனாவுக்கு சீற்றத்தை ஏற்படுத்தின

அதனை அடுத்து தற்பொழுது புதிய திட்டங்களின் கீழ் இலங்கைநாட்டை மறுசீரமைப்பு செய்திட மீளவும் கடன் ,உதவி ,உதவுதல் என்ற ஆசை வார்த்தைக்குள் இலங்கையை சிக்க வைத்துள்ளது ,

சீனாவின் இந்த சதுரங்க ஆட்டத்தில் இருந்து இலங்கை தப்புமா என்பதும் ,மக்களோ தப்பாது என்ற வகையிலும் தமது என்ன கருத்துக்களை பகிர்ந்த வண்ணம் உள்ளனர் – வன்னி மைந்தன் –

    Leave a Reply